SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜம்மு காஷ்மீரில் தொகுதி வரையறைக்கு பிறகு தேர்தல்; இயல்புநிலைக்கு பின் மாநில அந்தஸ்து: அமைச்சர் அமித்ஷா தகவல்

2022-01-23@ 00:43:28

புதுடெல்லி: ‘ஜம்மு காஷ்மீரில் தொகுதி வரையறைக்கு பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும். இயல்புநிலை திரும்பிய பின்னரே மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்,’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.நாட்டின் முதல், `சிறந்த மாவட்ட நிர்வாக குறியீட்டை’ ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று காணொலி மூலம் வெளியிட்டு பேசியதாவது: ஜம்மு காஷ்மீரின் மேம்பாட்டிற்கான பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளிக்கிறார்.

இங்கு ஜனநாயகத்தை நிலை நாட்டும் நோக்கத்துடன், தொகுதி வரையறைக்கு பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தவும், இயல்புநிலை திரும்பிய பின்னர் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, காஷ்மீரில் ₹12,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரின்  வளர்ச்சியில் பங்கெடுங்கும்படி இளைஞர்களை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

  • nepallumbii

    நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

  • ooty-rose-exhi-14

    50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

  • odisha_park

    இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்