ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் ஸ்வியாடெக்
2022-01-23@ 00:41:35

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார்.மூன்றாவது சுற்றில் ரஷ்யாவின் டாரியா கசட்கினாவுடன் (24 வயது, 23வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (20 வயது, 9வது ரேங்க்) 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்தார். இப்போட்டி 1 மணி, 35 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீராங்கனைகள் சிமோனா ஹாலெப், சொரானா சிர்ஸ்டீ (ருமேனியா), டேனியலி கோலின்ஸ் (அமெரிக்கா), கயா கானெபி (எஸ்டோனியா), ஆலிஸ் கார்னெட் (பிரான்ஸ்), எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நேற்று களமிறங்கிய கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-3, 7-5, 6-7 (2-7), 6-4 என்ற செட் கணக்கில் பிரான்சின் பெனாய்ட் பேரை வீழ்த்தினார். அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 6-0, 3-6, 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பாடிஸ்டா அகுத்தை போராடி வென்று 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.ரஷ்ய நட்சத்திரம் டானில் மெட்வதேவ், இத்தாலியின் யானிக் சின்னர், பெலிக்ஸ் ஆகர் அலியஸ்ஸிம் (கனடா), மரின் சிலிச் (குரோஷியா), அலெக்ஸ் டி மினார் (ஆஸி.) ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகள்
லிவிங்ஸ்டன் அபார பந்துவீச்சு வீண் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி: மார்ஷ் அரை சதம்
லிவிங்ஸ்டன் அபார பந்துவீச்சில் டெல்லி கேப்பிடல்ஸ் திணறல்: மார்ஷ் அரை சதம்
கோவில்பட்டியில் தேசிய இளையோர் ஹாக்கி இன்று தொடக்கம்
சில்லி பாயின்ட்...
இத்தாலி சர்வதேச டென்னிஸ் 6வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்
அனல் பறக்கப்போகும் கடைசி வாரம்; பிளேஆப் வாய்ப்பு யார், யாருக்கு? இன்று வெளியேற போவது டெல்லியா-பஞ்சாபா?
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!