அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது கிடப்பில் அங்கன்வாடி மைய கட்டிட பணிகள்: விரைந்து முடிக்க கோரிக்கை
2022-01-23@ 00:40:10

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் ஊராட்சியில் கிருஷ்ணாபுரம் கண்டிகை கிராமத்தில் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் அதே பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக பழுதடைந்து செடி, கொடிகள் படந்து காணப்பட்டது. மேலும், கட்டிடத்திலும் விரிசல் ஏற்பட்டது.
இதில் பூரான், தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளுடன் தான் மாணவ - மாணவிகள் அச்சத்துடன் படித்து வந்தனர். இதனால் தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் அங்கன்வாடிக்கு அனுப்ப தயங்கினர். இதுகுறித்து கலெக்டர் மற்றும் பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் அப்பகுதி மக்கள் பலமுறை மனு கொடுத்தனர். இந்நிலையில், கடந்த 5 வருடங்களாக பழைய கட்டத்தில் இருந்து அங்கன்வாடி மையம் தனியார் கட்டிடத்தில் ₹750 வாடகையில் இயங்கி வருகிறது. இதனிடையே, புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் 2019-2020ம் ஆண்டு திட்டத்தில் ₹10 லட்சம் செலவில் தொடங்கிய பணிகள் பாதி கட்டி முடிக்கப்பட்டு பணிகள் பாதியில் நிற்கிறது. அதிலும் செடிகொடிகள் படர்ந்துள்ளது. எனவே, அதிமுக ஆட்சியில் பாதியில் நிறுத்தப்பட்ட அங்கன்வாடி மைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலின் தெப்பத் திருவிழா கமலாலய குளத்தில் தொடங்கியது
காட்டுயானை மின்சாரம் தாக்கி பலி
அகத்தியர் தீவு அருகே 220 கிலோ ஹெராயின் பறிமுதல்: தமிழகம், கேரளாவை சேர்ந்த 20 பேர் கைது
கண்ணமங்கலம் அருகே சிங்கிரி கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை
மேட்டுப்பாளையம்- ஊட்டிக்கு சிறப்பு ரயில் சேவை: இன்று துவங்கியது
மதியநல்லூரில் ஜல்லிக்கட்டு 800 காளைகள் பங்கேற்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்