SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிஷன் இம்பாசிபிள் பாகம் 7, 8 தள்ளிவைப்பு

2022-01-23@ 00:14:18

லாஸ்ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த மிஷின் இம்பாசிபிள் படத்தின் முதல் பாகம் கடந்த 1994ம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதை அடுத்து இதுவரை இதன் 6 பாகங்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில், மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7ம் பாகத்தை இந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுஇருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொ டக்‌ஷன் பணிகள் தள்ளிப்போய்விட்டது.

இதனால், 2023 ஜூலை 14ம் தேதி படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதுபோல், மிஷன் இம்பாசிபிள் 8ம் பாகம் 2023ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், 2024ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மிஷன் இம்பாசிபிள் பாகம் 7, 8 ஆகிய இரண்டு படங்களும் ஒரு வருடம் தள்ளிப்போனதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுக்க ரசிகர்கள்  அதிருப்தி அடைந்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்