கோவையில் சொத்து வாங்கி குவித்ததாக அதிமுக நிர்வாகி, மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு
2022-01-23@ 00:12:28

கோவை:கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 வீரபாண்டி பேரூராட்சியில் தலைவராக பணியாற்றியவர் ஜெயராமன் (47). அதிமுகவை சேர்ந்த இவர், கடந்த 2001 முதல் 2016வரை மூன்று முறை பேரூராட்சி தலைவராக இருந்துள்ளார்.கடந்த 2011ல் இவர் தேர்தலில் போட்டியிட்ட போது அபிடவிட் தாக்கல் செய்திருந்தார். இதில் இவர், மற்றும் மனைவி கீர்த்தி பெயரில் அசையும், அசையாத சொத்துக்கள், வங்கி டெபாசிட் தொகை என 1.25 கோடி ரூபாய்க்கு சொத்து மதிப்பு காட்டியிருந்தார்.
5 ஆண்டு கடந்த நிலையில் 2016ல் சொத்து மதிப்பாக 3.43 ேகாடி ரூபாய் என அபிடவிட்டில் சொத்து மதிப்பு குறிப்பிட்டிருந்தார். 5 ஆண்டு காலத்தில் சொத்து மதிப்பு வெகுவாக அதிகமானது எப்படி என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து ஜெயராமன், கீர்த்தி ஆகியோர் மீது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். ஜெயராமன், கீர்த்தி ஆகியோர் மீது அரசு பதவியை பயன்படுத்தி சொத்து குவித்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நாட்டுப்புற நிகழ்ச்சியில் நடனமாடிய நடிகை மீது வழக்கு
எரிபொருள் விலை குறைப்பு குறித்த அறிவிப்பால் மக்களை முட்டாளாக்குவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: ராகுல் காந்தி ட்வீட்
பழங்குடியின மக்களின் தொடர் எதிர்ப்பால் தபி - நர்மதா நதிகள் இணைப்பு திட்டம் ரத்து: குஜராத் தேர்தல் தோல்வி அச்சத்தால் பாஜக பல்டி
நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch. ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு: புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE
முதியவரை அடித்தே கொன்ற கொடூரம்.. வெறுப்புணர்வை பாஜக தூபம் போட்டு வளர்ப்பதாக காங். புகார்: அரசியல் வேண்டாம், உரிய நடவடிக்கை நிச்சயம்: ம.பி. அரசு
அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு; 7.11 லட்சம் பேர் தவிப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்