இரவு நேர முழு ஊரடங்கு: வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு: 131 வாகனங்கள் பறிமுதல்
2022-01-22@ 18:45:06

சென்னை: நேற்று (21.01.2022) இரவு நேர முழு ஊரடங்கில், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 131 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முகக்கவசம் அணியாதது தொடர்பாக 4,082 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.8,16,400 அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.61,500 அபராதமும் வசூலிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு 06.01.2022 முதல் 31.01.2022 வரை வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரையில் இரவு நேர முழு ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமையன்று முழு நேர ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு சட்டம் & ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 10,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (21.01.2022) இரவு 10.00 மணி முதல் இன்று (22.01.2022) காலை 05.00 மணி வரை இரவு நேர ஊரடங்கில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் தலைமையில், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில், சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படை காவல் ஆளிநர்கள் கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, இரவு நேர ஊரடங்கில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் மீறியது தொடர்பாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய 125 இருசக்கர வாகனங்கள், 02 ஆட்டோக்கள் மற்றும் 04 இலகுரக வாகனம் என மொத்தம் 131 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், நேற்று (21.01.2022) கொரோனா தடுப்பின் முக்கிய வழிகாட்டுதல் நெறிமுறையான முகக்கவசம் அணியாதது தொடர்பாக 4,082 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.8,16,400/- அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.61,500 அபராதமும் வசூலிக்கப்பட்டது. ஆகவே, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு சமயத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கும்படி சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் செய்திகள்
தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்திய மாபெரும் தலைவரான கலைஞருக்கு சிலை திறப்பது மகிழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
வடக்கு, தெற்கு என பிரிக்காதீங்க: கமல், அக்ஷய் குமார் வேண்டுகோள்
பைனான்சியர் கொலை வழக்கு நீதிமன்றத்தில் ரவுடி சரண் : மேலும் 3 பேர் கைது
ரயில் மோதி இளம்பெண் பலி
70 கோடி மதிப்பீட்டில் அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்
மழைநீர் கால்வாய்களில் விதிமீறி கழிவுநீரை வெளியேற்றிய 2,983 இணைப்புகள் துண்டிப்பு: மாநகராட்சி நடவடிக்கை
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!