SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்நாட்டுக்கு ஓகேனக்கல் 2-வது கூட்டுக் குடீநீர் திட்டத்தை தொடங்க சட்டப்படி உரிமை உண்டு: அமைச்சர் துரைமுருகன் கர்நாடக குற்றச்சாட்டுக்கு பதிலடி

2022-01-22@ 17:48:59

சென்னை: கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் அவர்களின் குற்றச்சாட்டிற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலறிக்கை அனுப்பியுள்ளார். ஓகெனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை ரூ.4,600 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்படும் என்ற ஓர் அறிவிப்பை கண்டு கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் வெகுண்டெழுந்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த ஓகௌக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை செயல்பட விடமாட்டோம் என்று ஓர் அறிவிப்பை செய்திருக்கிறார். குடிநீர் தேவைக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொல்வது எந்தவிதமான மனிதாபிமானம் என்று தெரியவில்லை. மனிதாபிமான அடிப்படையிலும் சரி சட்டபூர்வமான அடிப்படையிலும் சரி தமிழ்நாட்டுக்கு ஒகெனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை ஆரம்பிக்கின்ற உரிமை உண்டு, மாண்புமிகு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சருக்கு ஞாபகம் இருக்கும் என்று கருதுகிறேன் காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்குகிற பொழுது, முதலில் காவிரி பாயும் மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலமும் காவிரி பாசன பகுதி எவ்வளவு என்று கணக்கிட்டு அதற்குரிய விகிதாச்சார அடிப்படையில் தண்ணிரை பகிர்ந்தளித்தார்கள்.

அடுத்ததாக, காவிரி நதி நீர் ஆணையம் 52.2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பில் நிகர குடிநீர் தேவைக்காக (Comumptive Use) 22 டிஎம்சி நீர் ஒதுக்கியுள்ளது. அதாவது சுமார் 33 டிஎம்சி காவிரி நீரிலிருந்து குடிநீருக்காக எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. இப்படி அனைத்து பங்களிப்பும் முடிந்து பிறகும் எஞ்சிய தீர்ப்பங்கீட்டின் கீழ் (Balance Water considering The Permitted Irrigation Scheme) 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படிகிடை இந்து 28712எம்.சி. 16.2 2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதி தீர்ப்பை உறுதி செய்திருக்கிறது.

மேலும், இந்திய மற்றும் தமிழ்நாட்டின் நீர்வள கொள்கைகளின்படி குடிநீர் தேவைக்குதான் முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இறுதி தீர்ப்பு Clause 18-ன்படி. இம்மாதிரியான அத்தியாவசிய தேவைகளுக்கு நீரை கொடுக்கப்பட்டுள்ளது. உபயோகப்படுத்திக் கொள்ள உரிமை ஆக, எப்படி பார்த்தாலும், திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். காவிரி-ஓகெனக்கல் இரண்டாவது குடிநீர் இறுதியாக ஒன்று, வீட்டுப் பயன்பாடு, உள்ளாட்சிப் பயன்பாட்டு விநியோகம், தொழில்சார் விநியோகம் என்பன கோன்ற காரணங்களுக்காக ஒரு மாநிலத்தால் எந்தவொரு நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திருப்பிவிடப்பட்டாலும், அது அந்த நீராண்டல் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் பயன்பாட்டுக் கணக்கில்தான் சேர்க்கப்படும் என்பது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் முடிவாகும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • peru_Clowns Day

  பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு

 • yercaussss

  ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!

 • america_primery

  அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

 • shortest-man-world-25

  மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

 • modheadd1

  பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்