வாளையாறு சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு: இரண்டு ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதி
2022-01-22@ 17:35:08

வாளையாறு: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் தமிழக - கேரள எல்லையான வாளையாறு சோதனைச்சாவடியில் தீவிர தணிக்கைக்கு பிறகே வாகனங்கள் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றது. தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாநில, மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு பணிகளில் போலீஸ் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். கேரளாவிற்கு மிக அருகில் கோவை மாவட்டம் இருப்பதால், கேரளாவிலிருந்து கோவைக்கு வரக்கூடிய 14 பாதைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை ஊரடங்கு என்பதால் இன்றே மக்கள் அதிகமாக கோவைக்குள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், அப்பகுதியில் வரக்கூடிய வாகனங்களை நிறுத்தி, வருவதற்கான காரணம் என்ன என்பதும், இரண்டு ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதி என்றும் தெரிவித்துள்ளனர். 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை 72 மணிநேரத்திற்குள் எடுத்துக்கொண்ட சான்றிதழ் இருந்தால் தான் தமிழகத்திற்குள் அனுமதி எனவும் தெரிவித்துள்ளனர். தேவையற்ற பயணமான சுற்றுலா தளங்களுக்கு வரக்கூடிய நபர்களுக்கு நாளை முழுஊரடங்கு என்பதை எடுத்துரைத்து மீண்டும் அவர்களை கேரளாவிற்கே அனுப்பிவைக்கின்றனர். கோவை மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 3,000 கடந்த நிலையில், சோதனைச்சாவடியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலின் தெப்பத் திருவிழா கமலாலய குளத்தில் தொடங்கியது
காட்டுயானை மின்சாரம் தாக்கி பலி
அகத்தியர் தீவு அருகே 220 கிலோ ஹெராயின் பறிமுதல்: தமிழகம், கேரளாவை சேர்ந்த 20 பேர் கைது
கண்ணமங்கலம் அருகே சிங்கிரி கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை
மேட்டுப்பாளையம்- ஊட்டிக்கு சிறப்பு ரயில் சேவை: இன்று துவங்கியது
மதியநல்லூரில் ஜல்லிக்கட்டு 800 காளைகள் பங்கேற்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்