ஆவடி காவல் ஆணையரகம் பகுதிகளில் முக கவசம் அணிந்தவர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி போலீசார் நன்றி
2022-01-22@ 17:18:23

ஆவடி: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து அந்த நோயை கட்டுப்படுத்த அனைவரும் முக கவசம் அணியவேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், அடிக்கடி கைகளை கழுவவேண்டும் என்று தமிழக அரசு அறிவுரை வழங்கி வருகிறது. இந்த நிலையில், ஆவடி காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 25 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முக கவசம் அணிந்துசெல்லும் வாகன ஓட்டிகளுக்கு காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், நன்றி தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டார்.இதன்படி, மேற்கண்ட காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து முக்கிய சாலைகளிலும் நேற்று போக்குவரத்து பிரிவு போலீசார், முக கவசம் அணிந்துசெல்லும் வாகன ஓட்டிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
அத்துடன் அவர்களது வாகனங்களில் முகப்பு பகுதியில், ‘’மாஸ்க் அணிந்து வந்ததற்கு நன்றி’’ என்ற வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கரை ஒட்டினர். இவ்வாறாக பைக், கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி வாகன ஓட்டுனர்களுக்கு போலீசார் நன்றி தெரிவித்தனர். அப்போது போலீசார், ‘கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் தொடர்ந்து முக கவசம் அணியவேண்டும். உங்கள் குடும்பத்தினர் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்ல வலியுறுத்துங்கள்’ என்று கேட்டுக்கொண்டனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கினர்.
மேலும் செய்திகள்
தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்திய மாபெரும் தலைவரான கலைஞருக்கு சிலை திறப்பது மகிழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
வடக்கு, தெற்கு என பிரிக்காதீங்க: கமல், அக்ஷய் குமார் வேண்டுகோள்
பைனான்சியர் கொலை வழக்கு நீதிமன்றத்தில் ரவுடி சரண் : மேலும் 3 பேர் கைது
ரயில் மோதி இளம்பெண் பலி
70 கோடி மதிப்பீட்டில் அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்
மழைநீர் கால்வாய்களில் விதிமீறி கழிவுநீரை வெளியேற்றிய 2,983 இணைப்புகள் துண்டிப்பு: மாநகராட்சி நடவடிக்கை
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!