SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூரில் பரபரப்பு!: முகநூல் நட்பால் ரூ.3 லட்சம் பணத்தை இழந்தவர் தூக்கிட்டு தற்கொலை..என்னை மன்னித்துவிடுங்கள் என உருக்கம்..!!

2022-01-22@ 16:47:33

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் ரூ.3 லட்சம் கடனாக பணத்தை திரும்ப பெற முடியாததால் கடிதம் எழுதி வைத்துவிட்டு நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அடுத்த பவித்திரமாணிக்கம் மீனாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி திருச்சியில் நில அளவை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். நீலகண்டன் வேலை எதுவும் பார்க்காமல், தனது மகளை கவனித்துக் கொண்டு தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் முகநூல் மூலம் நீலகண்டனுக்கு சித்தன்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த சத்தியசீலன் என்பவர் பழக்கமாகியுள்ளார்.

நீண்ட நாட்கள் பழகி வந்த நம்பிக்கையின் அடைப்படையில் அவருக்கு ரூ.3 லட்சம் ரொக்கம் பணத்தை நீலகண்டன் கடனாக கொடுத்து உதவியுள்ளார். இதனையடுத்து பணி விடுமுறையில் ஊருக்கு வந்த நீலகண்டனின் மனைவி பணம் குறித்து கேட்ட போது, பணம் சத்யசீலனிடம் கொடுத்துள்ளதாகவும், விரைந்து வாங்கி தந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாக சத்தியசீலன் பணத்தை கொடுக்காமல், நீலகண்டனை அலைக்கழித்ததாகவும், நேரில் சென்று கேட்ட போது பணம் தர மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் நீலகண்டன் குடும்பத்தில் வேறு ஏதும் பெரும் பிரச்சனை உருவாகி விடுமோ? என்ற மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நீலகண்டன் கடந்த 20ம் தேதி இரவு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். மறுநாள் காலை நீலகண்டனின் மகள் எழுந்து பார்த்தபோது, தந்தை தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் நீலகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் நீலகண்டன் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.             

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

 • arungatchimmaa1

  சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்