ஐஏஎஸ் அதிகாரிகளின் அரசுப்பணிக்கான பணி நிரவல்: விதிகளில் திருத்தம் கொண்டுவந்த ஒன்றிய அரசு
2022-01-22@ 15:03:43

டெல்லி: ஐஏஎஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசுப்பணிக்கு பணி நிரவல் செய்வது தொடர்பாக புதிய சட்டதிருத்தத்தைக் கொண்டுவருவதற்கான முன்மொழிவை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மதிப்பெண் அடிப்படையில் சொந்த மாநிலத்திலோ, பிற மாநிலங்களிலோ பணியமர்த்தப்படுவார்கள். ஒன்றிய அரசின் மூலமாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் நியமிக்கப்படும் மாநில அரசின் முடிவின் படியே பணியிடங்கள் இறுதி செய்யப்படுகின்றன. அதே நேரம் மத்திய அரசு துறைகளில் பணியாற்ற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அதிகாரிகளை ஒவ்வொரு மாநிலமும் அனுப்ப வேண்டும் என்ற விதி உள்ளது. இந்நிலையில் அது சார்ந்த விதி எண் 6-ன் கீழ் சில திருத்தங்களை ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ளது.அதன்படி,
*குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒன்றிய அரசு கோரும் அதிகாரியை மாநில அரசு விடுவிக்காவிட்டால் மாநில அரசின் ஒப்புதல் இன்றியே பணியிலிருந்து அதிகாரிகள் விடுபடலாம். தற்போதைய விதிப்படி குறிப்பிட்ட அதிகாரியை விடுவிக்க மாநில அரசின் ஒப்புதல் அவசியம்; அவர்கள் ஒப்புதல் அளிக்க எந்த கால அளவும் இல்லை.
* எவ்வளவு அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிக்கு அனுப்ப வேண்டும் என்பதை ஒன்றிய அரசே முடிவு செய்யும் என்று திருத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள விதிமுறைகளின் படி மாநிலத்தின் மொத்த அதிகாரிகளின் எண்ணிக்கையில் 40% பேரை ஒன்றிய அரசு பணிக்கு அனுப்பவேண்டும்.
* ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே குறிப்பிட்ட அதிகாரியை ஒன்றிய அரசு பணிக்கு அனுப்புவதில் முரண்பாடு ஏற்பட்டால் ஒன்றிய அரசே இறுதி முடிவை எடுக்கும் என்று திருத்தும் செய்யப்பட்டுள்ளது.
* ஒன்றிய அரசு துறைகளில் நேரடியாக பணியாற்ற ஒன்றிய அரசு அழைத்தால் சம்மந்தப்பட்ட அதிகாரியின் சுயவிருப்பம் கூட அவசியமில்லை என்றும், சர்வதேச அமைப்புகளில் பணியாற்றவே அவரது விருப்பம் அவசியம் என்றும் விதிகள் உள்ளன.
இந்த முன் மொழிவுகள் குறித்த கருத்துக்களை ஜனவரி 25ம் தேதிக்குள் மாநில அரசுகள் தெரிவிக்கவேண்டுமென்றும், இதற்கு மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விதிகளின்படி, மாநில அரசுகள் அதிகாரிகளை அனுப்ப மறுப்பதால் ஒன்றிய அரசு துறைகளில் போதிய அதிகாரிகள் இல்லை என்பதாலேயே இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக ஒன்றிய அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்த புதிய விதிகளை மாநில அரசுகள் ஏற்குமா? ஏற்காதா? என்பது குறித்து விரைவில் தெரியவரும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6-ம் குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
சிபிஐ என்னிடம் தவறாக நடந்து கொண்டது!: லாலு மனைவி ரப்ரி பகீர் குற்றச்சாட்டு
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்: அரியானாவில் பயங்கரம்
2 ஆண்டாக வீட்டுக்கு வராததால் இறுதிசடங்கு முடிந்தது கணவன் திடீரென வீடு திரும்பியதால் விதவை மனைவியுடன் மறுமணம்: பழங்குடியினர் கிராமத்தில் விநோதம்
கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகையின் சூட்கேஸ் மாயம்: நகைகள் தப்பியதால் நிம்மதி
நடிகர் சஞ்சய் தத்துடன் கல்லூரி காலத்தில் சினிமாவில் நடித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதி: ஓய்வுபெறும் நாளில் வெளியே தெரிந்தது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்