கொத்தகோட்டை, கொத்தூர் பகுதிகளில் எருது விடும் விழாவில் வித்தை காட்டிய காளைகள்-பார்வையாளர்கள் 25 பேர் காயம்
2022-01-22@ 14:34:49

வாணியம்பாடி : கொத்தகோட்டை, கொத்தூர் பகுதிகளில் எருது விடும் விழாவில் காளைகள் துள்ளி குதித்து ஓடி வித்தை காட்டின. இதில், பார்வையாளர்கள் 25 பேர் காயமடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 67-ம் ஆண்டு எருது விடும் விழா நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 150 காளைகள் ேபாட்டியிட வைக்கப்பட்டன.
களத்தில் சீறிப்பாய்ந்த எருதுகள் அங்குமிங்குமாக ஓடின. இதில், சில காளைகள் வளைந்து நௌிந்து ஓடி வித்தை காட்டின. குறிப்பிட்ட வினாடிகளில் இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசு ரூ.60 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.40 ஆயிரம் என 30 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.
வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி தலைமையிலான வருவாய் துறையினர் ேமற்பார்வையில் சுமார் 100 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி தாலுகா நெ.1 கொத்தூர் பகுதியில் நேற்று மயிலார் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடைபெற்றது. இதில் நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்றன. காளைகள் அனைத்தும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின் போட்டியில் பங்கேற்றன.
களத்தில் அங்கும் மிங்கும் ஆவேசமாக ஓடிய காளைகளை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். இதில் குறிப்பிட்ட தொலைவை குறைந்த நேர்த்தில் ஓடி கடந்த காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. போட்டியை கண்டதில் 25 பேர் காயம் அடைந்தனர்.
மேலும் செய்திகள்
திருமண மண்டபம் முன்பதிவு செய்ய வந்தபோது கார் கவிழ்ந்து மணப்பெண் பலி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.40 லட்சம் கனஅடியாக சரிவு
திருமணமான காதலியை பார்க்க நள்ளிரவில் வீட்டின் சுவர் ஏறி குதித்த வாலிபர் சிக்கினார்
சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மீது லாரி மோதி விபத்து...
பாலாற்றில் தடுப்பணை அமைத்து நீர்வளத்தை பாதுகாக்க வலியுறுத்தல்
மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் 60 சதவீத மானியத்தில் கடனுதவி: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!