அமைச்சர்கள் ராமசந்திரன் பி.மூர்த்திக்கு கொரோனா: அதிமுக எம்.எல்.ஏக்கும் தொற்று
2022-01-22@ 00:12:23

சென்னை: தமிழக அமைச்சர்கள் ராமசந்திரன், பி.மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் கடந்த இரு நாட்களாக சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவர், நீலகிரி மாவட்டம் குன்னூர் இளித்தொரை பகுதியில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்திக்கு கடந்த 2 நாட்களாக லேசான காய்ச்சல் இருந்தது. நேற்று முன்தினம் இரவு காய்ச்சல் சற்று அதிகமானதால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில் அவருக்குகொரோனா பாதிப்பு இருந்தது தெரிந்தது. தொடர்ந்து மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் உள்ளார்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் (தனி) தொகுதி அதிமுக எம்எல்ஏ அர்ஜுனனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கார் மூலம் சென்னை சென்றார்.
மேலும் செய்திகள்
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ விபத்து: கண் எரிச்சல், சுவாசக்கோளாறால் மக்கள் அவதி
சாலை தடுப்பில் பைக் மோதி மகன் பலி; தந்தை படுகாயம்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு
குழாய் மாற்றியமைக்கும் பணி காரணமாக கொடுங்கையூரில் 23ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வாரியம் அறிவிப்பு
இருசக்கர வாகனங்களில் இனிமேல் பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்
தமிழகத்தில் கள்ளச்சாராயம் போலி மதுவை ஒழிக்க நடவடிக்கை: எடப்பாடி கோரிக்கை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்