ஒன்றிய அரசை கண்டித்து 26ம் தேதிஆர்ப்பாட்டம்: முத்தரசன் பேட்டி
2022-01-22@ 00:12:21

புதுச்சேரி: புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:நாட்டின் விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் படங்கள் இடம் பெற்ற தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கடந்த 17ம் தேதி முதல் தொடர்ந்து போராடி வருகிறோம். வருகிற 26ம் தேதி மாநில கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்துவிட்டு நல்லக்கண்ணு தலைமையில் சென்னையில் ஒன்றிய அரசின் மோசமான செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமிழகத்தில் முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் வேலையில் ஈடுபடுவதாக இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் சொல்கிறார்கள். ஆகையால், அடுத்து அவர்களும் விசாரிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. தமிழகத்தில் தரமான பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. அந்த இடங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
இனி பெட்ரோல் கவலை இல்லை!: பிளாஸ்டிக் கவர் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிக்கலாம் : பழனி மாணவரின் அசாத்திய கண்டுபிடிப்பு.!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா: கிராமமே கூடி மீன்பிடித்து உற்சாகம்..!!
சுகாதாரத் துறையில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
செஞ்சி அருகே பரபரப்பு ஓபிஎஸ் விழாவில் பொருட்களை அள்ளிச் சென்ற அதிமுகவினர்: பீரோ, சீர்வரிசை பொருட்களுடன் ஓட்டம்
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பால் கச்சா எண்ணெய் வயலில் பரவியது
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலி மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு: பாசனத்துக்காக முதல்வர் நாளை தண்ணீர் திறப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்