தமிழ்த்தாய் வாழ்த்து வழக்கு தள்ளுபடி
2022-01-22@ 00:12:16

சென்னை: மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலில், திருத்தங்கள் செய்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அறிவித்ததை எதிர்த்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய முழுமையான பாடலை திருத்தியதை எதிர்த்து ஜெபமணி ஜனதா கட்சியின் பொது செயலாளரான ஜெ.மோகன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2007ல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றி அமைக்க அரசுக்கு உரிமை உள்ளது. பாடலுக்கான காப்புரிமையை மனுதாரர் பெற்றிருக்கவில்லை. எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து, 1970ல் திருத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து பாடப்பட்டு வந்த நிலையில், 37 ஆண்டுகள் கழித்து வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது என கூறிய நீதிபதிகள், ஜெபமணி மோகன்ராஜின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ விபத்து: கண் எரிச்சல், சுவாசக்கோளாறால் மக்கள் அவதி
சாலை தடுப்பில் பைக் மோதி மகன் பலி; தந்தை படுகாயம்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு
குழாய் மாற்றியமைக்கும் பணி காரணமாக கொடுங்கையூரில் 23ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வாரியம் அறிவிப்பு
இருசக்கர வாகனங்களில் இனிமேல் பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்
தமிழகத்தில் கள்ளச்சாராயம் போலி மதுவை ஒழிக்க நடவடிக்கை: எடப்பாடி கோரிக்கை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்