துக்க வீட்டில் மது அருந்தியபோது தகராறு; கோடாரியால் சரமாரி வெட்டி தம்பியை கொன்ற அண்ணன்
2022-01-22@ 00:04:43

சென்னை: கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்டணமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(46). இவரது தம்பி சுரேஷ்(37). இருவரும் கட்டிட தொழிலாளிகள். தாய் தனலட்சுமியுடன் வசித்து வந்தனர். சுப்பிரமணிக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார். சுரேசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், அேத பகுதியில் நேற்று முன்தினம் நடந்த துக்க நிகழ்ச்சியில் சுப்பிரமணி, சுரேசுடன் சென்றார். அங்கு இரவு வீட்டில் ஒன்றாக அமர்ந்து இருவரும் மது அருந்தினர். அப்போது, போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர். ஆத்திரமடைந்த சுப்பிரமணி வீட்டில் மரம் வெட்ட பயன்படுத்தும் கோடாரியால் சுரேஷை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார்.
படுகாயமடைந்த சுரேசை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக பலியானார். தகவலறிந்த கவரப்பேட்டை போலீசார் கெட்டணமல்லி கிராமத்துக்கு விரைந்து வந்து சுரேஷின் ரத்தம் கொட்டிய இடத்தையும், கொலைக்கான காரணங்கள் வேறு ஏதேனும் உள்ளதா என அப்பகுதி மக்களிடம் தீவிரமாக விசாரித்தனர். மேலும், சுரேஷின் சடலத்தை கைப்பற்றி அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
10ம் வகுப்பு மாணவனை தாக்கிய மர்ம கும்பலுக்கு வலை
மளிகை கடையை உடைத்து திருட்டு
வாலிபரை கல்லால் தாக்கியவர் கைது
அரசாங்க உத்தரவுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்களை வழங்கியவர் மீது வழக்கு பதிவு
2019ம் ஆண்டு இளம்சிறார், சிறுமிகளின் ஆபாச படம் விவகாரம் இன்ஸ்டாகிராமில் நண்பருக்கு அனுப்பிய கல்லூரி மாணவன் கைது: அமெரிக்காவில் உள்ள இளம்சிறார் அமைப்பு அளித்த புகாரின் மீது போலீஸ் நடவடிக்கை
பொது இடத்தில் தகராறு தட்டிக்கேட்ட மூதாட்டி வெட்டி படுகொலை: பிரபல ரவுடி கைது
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!