SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ் மீதான பிடி மேலும் இறுகுகிறது: நடிகர் திலீப் மீது கடும் குற்றப்பிரிவில் வழக்கு

2022-01-21@ 20:47:21

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியது தொடர்பாக பதிவான வழக்கில், நடிகர் திலீப்பிற்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் வகையில் கடும் குற்றப்பிரிவில் சேர்த்து போலீசார் நீதிமன்றத்தில் இன்று ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் போலீசாரை கொல்ல சதி திட்டம் தீட்டிய வழக்கில், கேரள உயர்நீதிமன்றத்தில் திலீப் உள்பட 6 பேர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட  சம்பவத்தில் திலீப் தான் மூளையாக செயல்பட்டுள்ளார். நடிகையை பலாத்காரம்  செய்ய திலீப் கூலிப்படையை ஏவியுள்ளார். பலாத்காரம் செய்ய கூலி படையை ஏவுவது வரலாற்றில் முதல் சம்பவம் ஆகும். விசாரணை அதிகாரிகளை கொல்ல சதி  திட்டம் தீட்டியது இதுவரை கேள்விப்படாத ஒன்று. பலாத்கார வழக்கில் இடையூறு செய்ய திலீப் ெதாடர்ந்து முயன்று வருகிறார். இந்த வழக்கில் 20 அரசு தரப்பு  சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினர். இதற்கு திலீப் தான் காரணம். பணம் ெகாடுத்தும், மிரட்டியும் சாட்சிகளை வாபஸ் பெற வைத்துள்ளார். திலீப்பிற்கு எதிராக பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளது.

ஆகவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். திலீப், அவரது தம்பியின்  வீட்டில் நடந்த சோதனையில் செல்போன்கள் உள்பட 19 ஆவணங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.
திலீப் சட்டத்தை மீறுவதற்கான எல்லா முயற்சிகளையும்  செய்து வருகிறார். இவ்வாறு போலீஸ்  தாக்கல் செய்த மனுவில்  ெதரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திலீப் உள்பட 6 பேர் தொடர்ந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி கோபிநாத், இது ஒரு முக்கியமான வழக்கு ஆகும். எனவே கூடுதலாக விவரங்களை கேட்க வேண்டியுள்ளது. ஆகவே நாளை(22ம் தேதி) இந்த மனு மீது விசாரணை நடைபெறும் என்று கூறினார்.

இதற்கிடையே திலீப்பிற்கு எதிரான பிடியை போலீஸ் மேலும் இறுக்கியுள்ளது. ஆலுவா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் இன்று ஒரு அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், டிஎஸ்பி உள்பட போலீசாருக்கு எதிராக சதி திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் திலீப் மீது மிக கடுமையான பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. முதலில் சதி திட்டம் தீட்டியதற்கு இபிகோ 120பி பிரிவில் திலீப் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது திலீப மீது மட்டும் மேலும் ஒரு கடுமையான பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் போலீஸ் அதிகாரிகளை கொல்வதற்காகவே சதி திட்டம் தீட்டப்பட்டுள்ள்து என குறிப்பிடப்பட்டுள்ளது. சாதாரணமாக சதி திட்டம் தீட்டியதை நிரூபிப்பது கடும் சிரமம் ஆகும். இதை பயன்படுத்தி திலீப் இந்த வழக்கில் இருந்து தப்பி விடாமல் இருப்பதற்காகவே போலீஸ் அதிகாரிகளை கொல்லும் நோக்கத்தில் சதி திட்டம் தீட்டிய பிரிவு திலீப் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் திலீப்பிற்கு ஆயுத தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே பலாத்கார வழக்கு திலீப்பிற்கு மேலும் கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • france_elizabeth

  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

 • assam-rain-17

  அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

 • nellai-16

  நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்