மம்மூட்டியை தொடர்ந்து அவரது மகன் நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா
2022-01-21@ 20:16:12

திருவனந்தபுரம்: நடிகர் மம்மூட்டியை தொடர்ந்து அவரது மகனும், நடிகருமான துல்கர் சல்மானுக்கும் கொரோனா பரவியுள்ளது. கேரளாவில் நடிகர், நடிகைகளுக்கு கொரோனா வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகர்கள் சுரேஷ்கோபி, அன்னா பென் உள்பட சிலருக்கும் தொற்று பரவியது. இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மும்மூட்டி ‘ஒரு சிபிஐ டைரி குறிப்பு’ 5வது பாகத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வந்தது. இதையொட்டி மும்மூட்டி திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார்.
கடந்த சில தினங்ளுக்கு முன்பு கொரோனா அவருக்கு கொரோனா பரவியது. தற்போது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இதனால் அந்த படத்தின் படப்பிடிப்பு 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது மகனும், நடிகருமான துல்கர் சல்மானுக்கும் கொரோனா பரவி உள்ளது. இந்த தகவலை சமூக இணையதளம் மூலம் அவரே வெளியிட்டுள்ளார். தனக்கு கொரோனா பாதித்து உள்ளது. வீட்டில் சுய தனிமையில் இருக்கிறேன். லேசான காயச்சல் தவிர வேறு பிரச்னைகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டது இந்திய ஹஜ் குழு
2 ஆண்டு தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி அப்பீல் செய்ய முடிவு: சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை
மத்திய பிரதேசத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது கோயில் படிக்கிணற்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 12 பேர் பலி..!!
குமரியில் கடற்கரை முகப்புப்பகுதி மேம்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு விருது: அமைச்சர் கிஷன் ரெட்டி வழங்கினார்
பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்ற 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்!
முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர், ஜெயலலிதா ஆகியோருக்கு அரசு சார்பில் விழா நடத்தப்படும்: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!
ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி