மானாமதுரை அருகே வீட்டிலேயே தூக்கிட்ட நிலையில் இளம்பெண் சடலமாக மீட்பு: கணவர் வீட்டார் அடித்துக் கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு
2022-01-21@ 17:57:27

சிவகங்கை: மானாமதுரை அருகே திருமணமான இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கணவன் வீட்டார் அடித்து கொன்றதாக கூறி பெண் வீட்டார் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த குவளைவேலி கிராமத்தை சேர்ந்த கண்ணன். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 27 வயதான கோமதி. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 2 மாதங்களுக்கு முன்பு கண்ணன் சொந்த ஊர் திரும்பியுள்ளார். அப்போது இருந்தே கணவன், மனைவி இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கோமதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
கோமதியின் பெற்றோருக்கு தகவல் சொல்லிவிட்டு அவசர அவசரமாக உடலை மயானத்திற்கு கொண்டு சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோமதியின் உறவினர்கள் மானாமதுரை போலீசில் புகார் அளித்ததுடன் கோமதியை அடித்து கொன்றுவிட்டதாக கணவர் வீட்டார் மீது குற்றம் சாட்டினார். இதனையடுத்து கோமதியின் உடலை மீட்ட போலீசார் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
குமரி அருகே காரில் கஞ்சா கடத்தல் மும்பை எஸ்ஐ கணவர் சிக்கினார்
கணவர் விவாகரத்து கேட்டதால் புதுப்பெண் தூக்கிட்டு சாவு
கலப்பட பெட்ரோல் விற்ற 2 பேர் கைது
உடலை பேரலில் அடைத்து நிலத்தில் புதைத்த கொடூரம் தந்தையின் சடலம் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை: pமகனைப்பிடிக்க 5 தனிப்படைகள் pபுதைக்க உதவிய ஆட்டோ டிரைவர் கைது
அதிமுக மாவட்ட மாணவரணி தலைவருக்கு சரமாரி வெட்டு: போதை ஆசாமிகளுக்கு போலீஸ் வலை
விதவையை மிரட்டி பாலியல் பலாத்காரம்: 3 வாலிபர்கள் கைது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்