பொதுமக்கள் பங்களிப்புடன் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் ரூ.9.31 கோடி மதிப்பீட்டில் 70 திட்டப்பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி
2022-01-21@ 17:38:35

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் ரூ.9.31 கோடி மதிப்பீட்டில் 70 திட்டப்பணிகளை மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், நகர்ப்புற பகுதிகளில் வளர்ச்சிக்காக 'நமக்கு நாமே திட்டம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்படும் எனவும், இத்திட்டத்திற்கு குறிப்பிட்ட அளவு நிதி பங்களிப்பை அளிக்கும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என அறிவித்தார்.
இதன்தொடர்ச்சியாக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் 24.08.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் நீர்நிலைகள் புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்துதல், மரம் நடுதல், பள்ளிக் கூடங்கள் மேம்படுத்துதல், பொதுசுகாதார மையம், கற்றல் மையங்கள், சாலைகள், தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.300 கோடி மதிப்பில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
'நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்டோர் ஒரு பங்கு நிதி அளித்தால், அரசின் சார்பில் கூடுதலாக இரு பங்கு நிதி வழங்கப்பட்டு, மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்படும். மேலும், நீர்நிலைகள் புனரமைப்பு செய்தல் தொடர்பான பணிகளில் தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்தும் பணிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 50 சதவீத பங்களிப்பை பொதுமக்கள் அல்லது நிறுவனங்கள் வழங்க வேண்டும். இத்திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பிற்கு அதிகப்பட்ச வரம்பு ஏதும் இல்லை.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தில் நீர்நிலைகளை புனரமைத்தல், பூங்கா, விளையாட்டுத் திடல், போக்குவரத்து தீவுத்திட்டுக்கள், செயற்கை நீரூற்றுகள் மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல், மேம்படுத்துதல், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உயர்கோபுர சூரிய மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், மரக்கன்றுகளை நடுதல், பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய கட்டடங்கள், பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை (Smart Class) அமைத்தல், சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், நவீன நூலகங்கள் மற்றும் அறிவுசார் மையங்கள் அமைத்தல், புதிய பாலங்கள், குறுக்கு பாலம், மழைநீர் வடிகால் அமைத்தல், சாலைகளை மேம்படுத்துதல், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கட்டடங்களை அமைத்தல், அங்கன்வாடி மையங்கள், பொதுக்கழிப்பறைகள் மற்றும் மார்க்கெட் பகுதிகளை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், புதிய தகனமேடைகளை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம் என ஏற்கனவே பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பத்திரிக்கை செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் இதர பிற தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு அதில் 70 திட்டப் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் நிர்வாக அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டது.
70 நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.9.31 கோடி மதிப்பில் திட்ட பணிகளை மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த 70 திட்டப் பணிகளுக்கான மதிப்பீடான ரூ.9.31 கோடி மதிப்பீட்டில், ரூ.7.70 கோடி பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் பிற நிறுவனங்களின் பங்களிப்பாகவும், ரூ.1.61 கோடி அரசின் பங்களிப்பாகவும் வழங்கப்படவுள்ளது.
மேற்குறிப்பிட்ட 70 திட்டப் பணிகளில் 50 சதவீதத்திற்கு மேல் பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்பு உள்ள திட்ட பணிகளுக்கு நேரடியாக பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளுக்கு ஒப்பம் கோரப்பட்டு விரைவில் பணி தொடங்கப்படும்.
எனவே பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தில் திட்டப்பணிகளை மேற்கொள்ள விருப்பமுள்ள பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள், தாங்கள் செயல்படுத்த விரும்பும் மக்கள் நலத் திட்டத்தை தேர்வு செய்து, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர், துணை ஆணையாளர்கள், வட்டார துணை ஆணையாளர்கள், தலைமை பொறியாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்களை அணுகி தெரிவிக்கலாம் என அரசு முதன்மைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங்பேடி தெரிவித்துள்ளார்.
Tags:
நமக்கு நாமேமேலும் செய்திகள்
விடுதலையானார் பேரறிவாளன்.. ஆனந்த கண்ணீரில் குடும்பம்... பேரறிவாளனுக்கு இனிப்புகள் ஊட்டி தாய், தந்தை, உறவினர்கள் நெகிழ்ச்சி!!
சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்: ஆபத்தான முறையில் பாலத்தைக் கடக்கும் வாகன ஓட்டிகள்
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
சிதம்பரத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை : திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் விபரீத முடிவு!!
இலங்கையில் பெட்ரோல், டீசல் கையிருப்பு காலி : இந்தியா 4 லட்சம் டன் டீசலை அனுப்பி உதவி; தமிழக அரசு சார்பிலும் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு
பிளஸ் 2 பொதுத்தேர்வில் காப்பி அடிக்க முயற்சி மாணவர்களிடம் ‘மைக்ரோ ஜெராக்ஸ்’ பிட் பேப்பர்கள் ஒரு கிலோ பறிமுதல்: நாமக்கல்லில் கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!