விமானங்களை பாதுகாப்பாக இயக்க சென்னை விமான நிலையத்தில் அதிநவீன பாதுகாப்பு சாதனம்: இந்திய விமானநிலைய ஆணையம் அறிவிப்பு
2022-01-21@ 17:18:18

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் பாதுகாப்பாக இயக்க வசதியாக அதிநவீன பாதுகாப்பு சாதனம் அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சேவை பிரிவில் காலநிலைகளில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய நவீன சாதனம் அமைக்கப்பட்டுள்ளது. “ஐ.பி. என்ற இன்டர்நெட் புரோட்டக்கால்” என்ற தானியங்கி தகவல் பரிமாற்ற சாதனம் இந்தியாவில் முதன்முதலில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்படும்போது, இந்த தானியங்கி கருவி தானாகவே செயல்பட்டு, மேகமூட்டம், பனிப்பொழிவு, ஓடுபாதையில் போதிய வெளிச்சம் இல்லாமை, தெளிவான நிலை இல்லாமை போன்றவைகளை சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தும்.
அதற்கு தகுந்தாற்போல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவைகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படுவது, தரையிறங்குவது போன்றவைகளை பாதுகாப்பாக மாற்றியமைப்பார்கள். அதோடு இந்த நவீன தானியங்கி ஐ.பி கருவி செயல்பாட்டில் இருப்பதால், மோசமான வானிலை நிலவும் போது சென்னை விமான நிலையத்தில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வந்து தரையிறங்க, புறப்பட சிக்னல்களும் கிடைக்காமல் தடை செய்யும். இதனால் விமானங்கள், ஹெலிகாப்டர்களை பாதுகாப்பான முறைகளில் இயக்க முடியும். விபத்துகளை தவிர்க்க முடியும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற நவீன கருவி மும்பை, கொல்கத்தா விமான நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நவீன பாதுகாப்பான புதிய முறை படிப்படியாக இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட இருப்பதாகவும் இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவிக்கிறது.
தமிழகத்தில் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்ற ராணுவ ஹெலிகாப்டர் சமீபத்தில் விபத்திற்குள்ளாகி, இந்திய ராணுவ தலைமை தளபதி உட்பட 14 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்தது. அதுபற்றி ஆய்வு நடத்திய குழுவினர், திடீரென ஏற்பட்ட மேகக்கூட்டம் தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு..!!
நடிகர் தனுஷின் 'Wunderbar films' தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் சேனல் மீண்டும் செயல்பட தொடங்கியது
கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது: மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு
நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் மதுரை வருகை, அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது: எம்.பி. சு. வெங்கடேசன்
சென்னையில் கடந்த 5 மாதங்களில் மட்டும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி 98 பேர் பலி!!
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!