சாயல்குடி பகுதியில் நிலக்கடலை விளைச்சல் அமோகம்
2022-01-21@ 14:21:25

சாயல்குடி : ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலக்கடலை அமோகமாக விளைந்துள்ளதால் விவசாயிகள் கடலை பறிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.இந்தாண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி,செவல்பட்டி, கன்னிராஜபுரம், நரிப்பையூர், கூரான்கோட்டை, பூப்பாண்டியபுரம், பெரியகுளம், கடுகுசந்தை, சத்திரம், மேலச்செல்வனூர், காவாகுளம், மேலக்கிடாரம் உள்ளிட்ட கடலாடி வட்டாரத்தில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1900 ஏக்கரிலும், நயினார்கோயில் அருகே பாண்டியூர், சேமனூர், பரமக்குடி அருகே அக்ரமேசி, கமுதி அருகே பசும்பொன், மருதகநல்லூர் போன்ற பகுதிகள் உட்பட மாவட்டத்தில் சுமார் 10ஆயிரம் ஏக்கரில் விவசாய நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத கடைசியில் துவங்கியது. இதனால் 105 நாட்களில் மகசூல் தரக்கூடிய தரணி, கோ 7 ரகம் மற்றும் நாட்டு நிலக்கடலை பயிரிடப்பட்டது. தொடர்ந்து சீரான தொடர் மழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் நிலக்கடலை பயிர்கள் நன்றாக வளர்ந்தது. தற்போது வேர்கடலை நன்றாக விளைந்த நிலையில் விவசாயிகள் பறித்து விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கூரான்கோட்டை விவசாயிகள் கூறுகையில், காலம் கடந்து பருவமழை பெய்ததால் சில இடங்களில் மட்டும் நிலக்கடலை பயிர்கள் பாதிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான இடங்களில் கடந்த சில வருடங்களுக்கு பிறகு இந்தாண்டு நிலக்கடலை விளைச்சல் நன்றாக வந்துள்ளது. இதனால் ஒரு கிலோ கடலை ரூ.70 முதல் 80 வரை விலை போகிறது. பறிப்பதற்கு கூலியாக 5 முதல் 8 கிலோ வரையிலான நிலக்கடலை வழங்கப்படுகிறது. வரும் காலங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நிலக்கடலை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும் செய்திகள்
திருமண மண்டபம் முன்பதிவு செய்ய வந்தபோது கார் கவிழ்ந்து மணப்பெண் பலி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.40 லட்சம் கனஅடியாக சரிவு
திருமணமான காதலியை பார்க்க நள்ளிரவில் வீட்டின் சுவர் ஏறி குதித்த வாலிபர் சிக்கினார்
சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மீது லாரி மோதி விபத்து...
பாலாற்றில் தடுப்பணை அமைத்து நீர்வளத்தை பாதுகாக்க வலியுறுத்தல்
மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் 60 சதவீத மானியத்தில் கடனுதவி: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!