SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மயிலாடுதுறையில் ரயிலில் இருந்து தவறி விழுந்த தாய், சேயை மீட்ட ஆய்வாளருக்கு பாராட்டு

2022-01-21@ 09:50:37

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ரயிலில் இருந்து தவறி விழுந்த தாயையும், சேயையும் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. சோளம்பேட்டை கிராமத்தை சேர்ந்த மூதாட்டி மங்களம் என்பவரை வழியனுப்புவதற்காக அவரது மகள் கவிதா தனது 8 மாத குழந்தையுடன் ரயில் நிலையத்திற்கு சென்றிருந்தார். மூதாட்டியை ரயிலின் இருக்கையில் அமர வைத்துவிட்டு கவிதா பேசிக்கொண்டிருந்தார்.

திடீரென்று ரயில் புறப்பட்டதை அடுத்து குழந்தையுடன் இறங்கிய கவிதா நிலைதடுமாறி நடைமேடைக்கும், ரயிலுக்கு இடையே விழுந்தார். இதனை கண்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுதிர்குமார் கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாரிக்குக்கொண்டு இருவரையும் துரிதமாக காப்பாற்றினார். தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சுதிர்குமாரின் செயலுக்கு உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்