இந்தியாவில் ஒரே நாளில் 703 பேர் பலி... தினசரி பாதிப்பு 3.50 லட்சத்தை நெருங்கியது: அடுத்த சில நாளில் 4 லட்சத்தை தொடும் ..
2022-01-21@ 09:32:04

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.88 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.85கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 3,47,254 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,85,66,027 ஆக உயர்ந்தது.
* புதிதாக 703 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,88,396 ஆக உயர்ந்தது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,51,777 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,60,58,806 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20,18,825 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இந்தியாவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,692 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* குணமடைந்தோர் விகிதம் 93.50% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.27% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.23% ஆக குறைந்துள்ளது.
*இந்தியாவில் 1,60,43,70,484 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 70,49,779 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6-ம் குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
சிபிஐ என்னிடம் தவறாக நடந்து கொண்டது!: லாலு மனைவி ரப்ரி பகீர் குற்றச்சாட்டு
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்: அரியானாவில் பயங்கரம்
2 ஆண்டாக வீட்டுக்கு வராததால் இறுதிசடங்கு முடிந்தது கணவன் திடீரென வீடு திரும்பியதால் விதவை மனைவியுடன் மறுமணம்: பழங்குடியினர் கிராமத்தில் விநோதம்
கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகையின் சூட்கேஸ் மாயம்: நகைகள் தப்பியதால் நிம்மதி
நடிகர் சஞ்சய் தத்துடன் கல்லூரி காலத்தில் சினிமாவில் நடித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதி: ஓய்வுபெறும் நாளில் வெளியே தெரிந்தது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்