விதிமீறல் குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்
2022-01-21@ 00:07:12

மதுரை: விதிமீறல் குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த குமாரவேலு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருமயம் தாலுகா வளையன்வயல் கிராமத்தில் 7 ஏக்கரில் நடத்தப்படும் கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இதனால், அரசுக்கு பல கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கில் குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘விதிகளை மீறி கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குவாரி அளவீடு செய்யப்பட்டது. இதன்பேரில் ரூ.9 கோடி அபராதம் விதிக்கப்பட்டு, ஒரு மாதத்திற்குள் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விதிமீறல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், அபராத தொகையை வசூலிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.2க்கு தள்ளி வைத்தனர்.
Tags:
Violation Quarry Penalty Icord Branch Government Information விதிமீறல் குவாரி அபராதம் ஐகோர்ட் கிளை அரசு தகவல்மேலும் செய்திகள்
சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு நில அளவீடு பணிக்கு வந்த என்எல்சி அதிகாரிகளை தடுத்து மக்கள் போராட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் ‘மைக்ரோ பிட்’ பேப்பர் பறிமுதலால் 7 தேர்வு கண்காணிப்பாளர்கள் நீக்கம்: மாணவிகளை சோதனை செய்ய பெண் காவலர் நியமனம்
சிறைவாசிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தேன்:பேரறிவாளன் பேட்டி
கூடலூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் காட்டு யானை பலி
நெல்லை கல்குவாரியில் 3 பேர் பலியான சம்பவத்தில் கர்நாடகாவில் தங்கியிருந்த உரிமையாளர், மகன் கைது: நெல்லை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்