SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கன்டெய்னர் மோதி பெரியார் சிலை உடைந்தது

2022-01-21@ 00:07:07

விழுப்புரம்: விழுப்புரம் திருவிக வீதி, காமராஜர் வீதி சந்திப்பு பகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக பெரியார் சிலை உள்ளது. 3 அடி பீடத்தின் மீது 6 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டு, இரும்புக்கூண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திருவிக வீதி வழியாக சென்ற ஒரு கன்டெய்னர் லாரி,  காமராஜர் சாலையில் வளையும்போது, பெரியார் சிலை பீடத்தில் மோதியதில் முற்றிலும் இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த நகர போலீசார் வந்து லாரியை ஓட்டி வந்த மகாராஷ்டிர மாநிலம் வால்கி பகுதியைச் சேர்ந்த மச்சீந்திராதபலி(52)யை கைது செய்தனர். சிலை உடைப்பை கண்டித்து திமுக, அதிமுக, திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு வந்த அதிகாரிகள், சிலை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தபின் அனைவரும் கலைந்துசென்றனர். இதனைத்தொடர்ந்து, உடைந்த சிலையை ஊழியர்கள் மீட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று வைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்