ரூ.20 ஆயிரம் வாங்கிக்கொண்டு கைதிக்கு செல்போன் கொடுத்த சேலம் சிறை அதிகாரி சஸ்பெண்ட்
2022-01-21@ 00:07:05

சேலம்: கைதிக்கு ரூ.20 ஆயிரம் வாங்கி செல்போன் கொடுத்த புகாரில் உதவி சிறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சேலம் மத்திய சிறையில் செல்போன் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் சோதனை குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் செல்ேபான், சார்ஜர், ஒயர், சிம் கார்டு என அனைத்தும் தனித்தனியாக பிரித்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த செல்போனை சிறைக்குள் கொண்டு வந்தது எப்படி? என்பது குறித்து நடத்திய விசாரணையில் குண்டர் தடுப்பு சட்ட கைதிகள் சண்முகம் (எ)விக்கு, கார்த்தி (29), விசாரணை கைதி ரவி(எ) ரவிக்குமார் ஆகியோர் சிக்கினர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘கோபி என்ற கைதிக்காக உதவி சிறை அதிகாரி ராகவனுக்கு ரூ.20ஆயிரம் கொடுத்து, அவர் தான் கோபியின் தம்பியிடம் இருந்து செல்போனை வாங்கி சிறைக்குள் கொண்டு வந்து கொடுத்தார்’ என்றனர்.
இதையடுத்து உதவி சிறை அதிகாரி ராகவன், மற்றும் 3 கைதிகள் மீது அஸ்தம்பட்டி போலீசில் ஜெயிலர் ராஜமோகன் புகார் செய்தார். இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் விசாரணை நடத்தினார். இதில் உதவி சிறை அதிகாரி ராகவனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் விசாரணை முடியும் வரை சேலத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு முன்புதான் ராகவன், பாளை சிறையில் இருந்து பல்வேறு புகார்கள் எழுந்த காரணத்தினால் சேலத்துக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது கைதிக்கு செல்போன் கொடுத்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால் சிறை வார்டன்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:
Rs 20 000 prisoner cell phone Salem jail officer suspended ரூ.20 ஆயிரம் கைதி செல்போன் சேலம் சிறை அதிகாரி சஸ்பெண்ட்மேலும் செய்திகள்
25 மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்
ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு பகுதி கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
லாரி மோதி அடையாளம் தெரியாத நபர் பலி
ஊராட்சி அலுவலகத்தில் புகுந்த மண்ணுளி பாம்பு: பத்திரமாக மீட்பு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!