ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை எப்போது? உச்ச நீதிமன்றம் கருத்து
2022-01-21@ 00:06:51

புதுடெல்லி: ‘ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரதான வழக்கை நீதிபதிகளின் விசாரணை அமர்வு சூழலை பொருத்தே பட்டியலிட்டு விசாரிக்கப்படும்,’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய மேல்முறையீடு மனு மற்றும் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் தரப்பில் கடந்த நவம்பரில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவில், ‘ஆலையில் உள்ள உயர்ரக இயந்திர உபகரணங்கள் துருப்பிடித்து சேதமாகும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடிய உத்தரவை எதிர்த்த மனுவை ரத்து செய்து, ஆலை பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்,’ என கோரப்பட்டது. இதற்கு தமிழக அரசு தரப்பில் நேற்று முன்தினம் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஸ்டெர்லைட் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யும்படி கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன்னிலையில், ‘ஸ்டெர்லைட் பராமரிப்பு தொடர்பான பிரதான வழக்கு இன்று (நேற்று) விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு இருந்த நிலையில் அது திடீரென நீக்கப்பட்டுள்ளது. அதனால், அந்த மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு உடனடியாக விசாரிக்க வேண்டும். ஏனெனில், ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது,’ என கோரினார். இதை ஏற்பதாக தெரிவித்த நீதிபதி சந்திரசூட், ‘கொரோனா பிரச்னையின் காரணத்தினால் சில அமர்வுகள் இல்லாத நிலை உள்ளது. அதனால், நீதிபதிகளின் விசாரணை அமர்வின் சூழலை பொருத்துதான் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை பட்டியலிட்டு விசாரிக்க முடியும்,’ என தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6-ம் குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
சிபிஐ என்னிடம் தவறாக நடந்து கொண்டது!: லாலு மனைவி ரப்ரி பகீர் குற்றச்சாட்டு
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்: அரியானாவில் பயங்கரம்
2 ஆண்டாக வீட்டுக்கு வராததால் இறுதிசடங்கு முடிந்தது கணவன் திடீரென வீடு திரும்பியதால் விதவை மனைவியுடன் மறுமணம்: பழங்குடியினர் கிராமத்தில் விநோதம்
கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகையின் சூட்கேஸ் மாயம்: நகைகள் தப்பியதால் நிம்மதி
நடிகர் சஞ்சய் தத்துடன் கல்லூரி காலத்தில் சினிமாவில் நடித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதி: ஓய்வுபெறும் நாளில் வெளியே தெரிந்தது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்