SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாய்ண்ட்...

2022-01-21@ 00:06:44

* ஐஎஸ்எல் வீரர்களுக்கு கொரோனா
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் விளையாடும் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி வீரர்களில் சிலருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. அதனால் நேற்று நடைபெற இருந்த கேரளா- ஏடிகே மோகன் பகான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜன.16ம் தேதி மும்பை சிட்டி எப்சி அணியுடன்  கேரளா மோத இருந்த ஆட்டமும் ஒத்தி வைக்கப்பட்டது.  கூடவே ஜாம்ஷெட்பூர் எப்சி வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஜன.17ம் தேதி ஐதராபாத் எப்சிக்கு எதிரான ஆட்டமும் நடக்கவில்லை.

* சீனா வெற்றி
ஆசிய பெண்கள் கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேற்று மும்பையில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சீனா 4-0 என்ற கோல் கணக்கில் சீன தைபேயை வீழ்த்தியது.

* இந்தியருக்கு வாய்ப்பு
ஐசிசி சார்பில் தேர்வு செய்யப்பட்ட கடந்த ஆண்டுக்கான சர்வதேச டி20, ஒருநாள் மாதிரி அணிகளில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பிடிக்கவில்லை. இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட சர்வதேச டெஸ்ட் அணியில் இந்திய வீரர்கள் அஷ்வின், ரோகித் சர்மா, ரிஷப் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்களுடன் கேப்டனாக வில்லியம்சன்(நியூசிலாந்து), கருணரத்னே(இலங்கை), லாபுஷேன்(ஆஸி), ஜேமிசன்(நியூசி), ஜோ ரூட்(இங்கிலாந்து), பாவத், ஹசன் அலி,  அப்ரிடி(பாகிஸ்தான்) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

* ஐவர் கால்பந்து போட்டி
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், குடிசைவாழ் சிறுவர்கள் குழு(எஸ்டிஈடிஎஸ்)  இணைந்து நடத்தும் ‘யு10, யு13 ஐவர் கால்பந்து போட்டி ’ ஜன.25, 26தேதிகளில் நடைபெற உள்ளது. சென்னை வியாசர்பாடியில் நடைபெற உள்ள இந்தப்போட்டியில் பங்கேற்கும் அணிகள் ஜன.23ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய, மேலும் விவரங்கள் அறிய 94999 42487, 87545 65283  என்ற செல்போன் எண்களை தொடர்புக் கொள்ளவும்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

 • nellai-16

  நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

 • nepallumbii

  நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

 • ooty-rose-exhi-14

  50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

 • odisha_park

  இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்