SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மயிலாடும்பாறை பகுதியில் வவ்வால்களால் விவசாயம் பாதிப்பு

2022-01-20@ 16:25:29

*வனத்துறையினரின் நடவடிக்கை அவசியம்

வருசநாடு : மயிலாடும்பாறை அருகே வல்வால்கள் தொல்லையால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மயிலாடும்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தென்னை மற்றும் இலவம் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வவ்வால்கள் கூட்டம் மயிலாடும்பாறை பகுதிக்கு படையெடுத்தது.

பகல் நேரங்களில் ஓட்டணை அருகே மூலவைகை ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ள மருத மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும் வவ்வால்கள் இரவு நேரங்களில் இலவம், தென்னை மரங்களில் உள்ள பூ, பிஞ்சுகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் இரவு நேரங்களில் தோட்டங்களில் வெடிகள் வெடித்தும், புகைமூட்டம் எழுப்பியும் வவ்வால்களை விரட்டி வருகின்றனர்.

 இருப்பினும் வவ்வால்கள் தொல்லையை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் வவ்வால்களை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

  • nepallumbii

    நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

  • ooty-rose-exhi-14

    50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

  • odisha_park

    இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்