ஜம்முவில் சோகம் உறைபனியில் புதைந்த சிறுவன் சடலமாக மீட்பு
2022-01-20@ 14:30:07

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர், கிஷ்துவார் மாவட்டத்தில் உறைபனியில் உயிருடன் புதைந்த 7 வயது சிறுவனின் சடலத்தை போலீசார் மீட்டனர். கிஷ்துவார் மாவட்டம், திலார் கிராமம், மத்வா பகுதியில் வசிப்பவர் பஷீர் அகமது. இவரது மகன் முத்தாரீப் பஷீர் (7). தற்போது அப்பகுதியில் உறைபனி அதிகம் நிலவி வருகிறது. முத்தாரீப் பஷீர், தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தான். பின்னர் திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
உடனே போலீசார் விரைந்து சென்று, அவரது வீட்டருகே சோதனை நடத்தினர். அப்போது சிறுவனின் வீட்டு மேற்கூரை பனியால் பெயர்ந்து விழுந்து வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்ததும், அதில் சிறுவன் உறைபனியில் உயிருடன் புதைந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பனிக்குள் சிக்கிய சிறுவனின் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவலை காவல் துணை ஆணையர் அசோக் குமார் சர்மா கூறினார்.
மேலும் செய்திகள்
இந்தியாவில் ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா.. 14 பேர் பலி.... 2,296 பேர் குணமடைந்தனர்!!
காஷ்மீரில் டி.வி.நடிகை அம்ரீன் பட்டை கொன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை. 3 நாளில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்!!.
ஆட்டோவில் சென்ற நடிகையை அவமதித்த இன்ஸ்பெக்டர்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விசாரணையில் ஆளுங்கட்சியினரின் தலையீடா? நடிகை புகாரில் விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
டெல்லி ஸ்டேடியத்தில் வீரர்களை விரட்டியடித்து நாயுடன் வாக்கிங் சென்ற ஐஏஎஸ் தம்பதி இடமாற்றம்: ஒன்றிய அரசு அதிரடி
ஜம்முவில் பிரபல டிவி நடிகை சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் வெறியாட்டம்
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!