சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர் செல்வன் பரத் சுப்ரமணியனுக்கு ரூ.8 லட்சம் உயரிய ஊக்கத் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!!.
2022-01-20@ 12:35:44

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், சதுரங்க போட்டியில் 2019-ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டம் மற்றும் 2022-ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வன் பரத் சுப்ரமணியம் அவர்களுக்கு 8 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.
சென்னையில் 9-ம் வகுப்பு படித்து வரும் செல்வன் பரத் சுப்ரமணியன், 2013-ஆம் ஆண்டு முதல் தனது ஐந்தாவது வயதிலிருந்து மாநில, தேசிய மற்றும் சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று சிறப்பாக விளையாடிய செல்வன் பரத் சுப்ரமணியம்
2019-ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்றார். மேலும், 2022-ஆம் ஆண்டில் தனது 14-வது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
செல்வன். பரத் சுப்ரமணியத்திற்கு 2019-ஆம் ஆண்டு சர்வதேச சதுரங்க மாஸ்டர் பட்டம் வென்றமைக்காக 3 இலட்சம் ரூபாயும், 2022-ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றமைக்காக 5 இலட்சம் ரூபாயும் சேர்த்து, மொத்தம் 8 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, மாண்புமிகு சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., பயிற்சியாளர் திரு. ஷியாம்
சுந்தர் மற்றும் செல்வன் பரத் சுப்ரமணியத்தின் பெற்றோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்துக்கு 267 டிஎம்சி காவிரி நீர் விடுவித்தது கர்நாடகா
பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் தலைமையில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.50 கோடியில் மேம்பாலம் கட்டுமான பணிக்கு டெண்டர்: 2,100 அடி நீளம், 25 அடி அகலத்தில் அமைகிறது; 2 ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க உத்தரவு
ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாழும் பகுதிகளில் திருப்பணி நடைபெற உள்ள 1250 கோயில்களின் விவரங்கள்: இணையதளத்தில் வெளியிட்டது அறநிலையத்துறை
நிகத் ஜரீன் வெற்றி வாசன் வாழ்த்து
நெடுஞ்சாலை பணிகளில் குறைபாடுகளை களையும் வகையில் சென்னையில் சாலை, வடிகால் பணிகளை உள்தணிக்கை குழு திடீர் ஆய்வு: அமைச்சர் எ.வ.வேலு உத்தரவால் அதிரடி நடவடிக்கை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்