SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வராது... ஓமிக்ரானுக்கு பிறகும் புதிய தொற்றுகள் வர வாய்ப்பு : WHO பகீர்!!

2022-01-20@ 11:41:26

ஜெனீவா : கொரோனா தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனீவாவில்  உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,'கொரோனா வைரஸ் இப்போதைக்கு முடிவுக்கு வராது. ஓமிக்ரானுக்கு பிறகும் புதிய தொற்றுகள் வர வாய்ப்புகள் உள்ளன.

ஒமிக்ரான் வேண்டுமானால் தீவிரம் குறைந்ததாக இருக்கலாம்.   ஆனால் இது லேசான நோய் என்று தவறாக வழிநடத்தப்படுகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கைக்கு காரணமாகிறது,  உயிர் இழப்புகளையும் ஏற்படுத்துகிறது.  இந்த வைரஸ் இன்னும் தீவிரமாக பரவி வருகிறது . பலர் இன்னும்  பாதிக்கப்படலாம்,' என்றார்.

இதனிடையே உலகம் இன்னும் கொரோனா தொற்றின் முதல் கட்டத்தில் தான் உள்ளது என்றும் கொரோனா தொற்று  எப்போது முடிவுக்கு வரும் என்பது இப்போது கணித்து கூறி விட முடியாது என்று உலக பொருளாதார மன்றத்தில் அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி பாசி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்