ஹோட்டல் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருட்களை விற்பனை செய்த நைஜீரியர் உட்பட 4 பேர் கைது
2022-01-20@ 10:35:36

பெங்களூரு: தமிழகத்தில் ஹோட்டல் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருட்களை விற்பனை செய்த நைஜீரியர் உட்பட 4 பேரை பெங்களூரு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக பெங்களூரு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் பெங்களூரு எலெக்ட்ரானிக் தெருவில் வைத்து நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவர் மற்றும் சென்னையை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 84 கிராம் கொகைன் உட்பட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இவர்களுடன் நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளியான நைஜீரியர் பெரும்பாலும் தமிழகத்தில் ஹோட்டல்கள், பப் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவது தெரியவந்தது. பிடிபட்ட நைஜீரியர் போதைப்பொருள் கடத்துவது விற்பனை செய்வது மட்டுமல்லாமல் பல்வேறு விதமாக போதை அதிகரிக்கும் பொருட்களை உருவாக்க கற்றுக்கொடுப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த போதைப்பொருள் விற்கும் கும்பல் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
Tags:
கைதுமேலும் செய்திகள்
செயின் பறிக்க முயற்சி சிறுவன் உள்பட 2 பேர் கைது
அண்ணனூர் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் சிக்கிய திருடன்: கூட்டாளிக்கு வலை
மூதாட்டியிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு வலை
தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த அரியவகை விலங்குகள் பறிமுதல்: பயணியிடம் விசாரணை
சில்லரை கொடுப்பதில் பெண் பயணியுடன் தகராறு அரசு பஸ் கண்டக்டரை தாக்கி கடத்திய பாமக கவுன்சிலருக்கு வலை: 3 பேர் கைது
பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் சர்வேயர் கைது
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!