ரஷியா, உக்ரைனை ஆக்கிரமித்தால் அது அந்நாட்டிற்கு பேரழிவாக இருக்கும் :அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை
2022-01-20@ 09:24:15

வாஷிங்டன் : ரஷியா, உக்ரைனை ஆக்கிரமித்தால் அது அந்நாட்டிற்கு பேரழிவாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் தான் பதவியேற்ற ஓராண்டு நிறைவை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பேசினார். அப்போது ரஷியா, உக்ரைனை ஆக்கிரமித்தால் அது பேரழிவாக இருக்கும் என்றும் ரஷிய பொருளாதாரத்திற்கும் கடுமையான இழப்புகள் ஏற்படும் என்றும் எச்சரித்தார். ஏற்கனவே தான் 600 மில்லியன் டாலர் மதிப்பிலான அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை உக்ரைனைக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ரஷியாவிற்கு பாடம் புகட்ட கூட்டாளிகளும் தயாராக உள்ளனர் என்றார். உக்ரைனைக்குள் ரஷியா மேலும் முன்னேறினால் நான் உறுதி அளித்ததை போன்று பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்த பிடன், உக்ரைனைக்கு சென்றால் ரஷியர்கள் உடல் ரீதியான உயிரிழப்புகளையும் சந்திப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே உக்ரைன் எல்லையில் ரஷியா 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்து உள்ளதாகவும் உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷியா மீது அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளி நாடுகளும் பெரும் பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாகவும் தெரிகிறது. உக்ரைன் பிரச்சனையில் ரஷியாவிற்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும் கடும் முரண்பாடுகள் வளர்ந்து வருகின்றன.
மேலும் செய்திகள்
லும்பினியில் பிரதமர் மோடி பேச்சு நேபாளத்துடனான உறவு வலுவானது
இம்ரானை கைது செய்தால் பாகிஸ்தான் இலங்கையாக மாறும்..! மாஜி அமைச்சர் ஷேக் ரஷித் அகமது பரபரப்பு பேட்டி
கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள வடகொரியாவிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்: உலக சுகாதார அமைப்பு தகவல்
இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது: பிரதமர் ரணில் பேச்சு
போனில் ஆர்டர் செய்தால் போதும்...! டேபிள் தேடிவந்து உணவு பரிமாறும் ‘ரோபோ’..! வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு
நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசுக்கு ஆதரவு அளிக்கிறேன்: எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவிப்பு..!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!