எஸ்ஐயை வெட்டிய ரவுடி கைது
2022-01-20@ 00:03:35

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பக்கம் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (27). பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று முன்தினம் ஒரு வழக்கு தொடர்பாக அவரை பிடிக்க கும்மிடிப்பூண்டி சப்இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், காவலர் விமல் ஆகியோர் சென்றனர். அப்போது அவரது உறவினர்கள் மற்றும் யுவராஜ், போலீசாரை தடுக்க முயன்றனர். அதில் இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ், திடீரென கத்தியை எடுத்து எஸ்ஐ பாஸ்கரை வெட்டி விட்டு, காவலரை பல்லால் கடித்துவிட்டு தப்பினார்.
புகாரின்படி கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைத்து, தலைமறைவாக இருந்த யுவராஜை, நேற்று அதிகாலை 5 மணியளவில் ஆத்துப்பக்கம் ஏரிக்கரையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார், அவர் மீது, 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
விதவையை மிரட்டி பாலியல் பலாத்காரம்: 3 வாலிபர்கள் கைது
வாயில் விஷத்தை ஊற்றி மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது
காவேரிப்பாக்கம் அருகே இன்று கொலை செய்து புதைக்கப்பட்ட சென்னை முதியவர் சடலம் தோண்டி எடுப்பு
ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வங்கி கணக்கில் கொள்ள: மொபைல் பேங்க் லிங்க் அனுப்பி வடமாநில கும்பல் கைவரிசை
ஐசிஎப் கேரேஜ் பணிமனையில் ஆர்பிஎப் ஏட்டுக்கு சரமாரி கத்திக்குத்து: தப்பிய காவலர் மர்ம மரணம்
மனைவிக்கு சரமாரி வெட்டு: கணவன் கைது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்