SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமத்துவ காவலர்

2022-01-20@ 00:00:59

ஒரு நாட்டின் வலுவான கட்டமைப்புக்கும், அதிகாரப்பரவல்களின் மூலமான வளர்ச்சிக்கும் உள்ளாட்சிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. அதற்காகவே நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை போலவே, உள்ளாட்சிகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த  ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், 3 ஆண்டுகள் வரை அதிமுக அரசு தள்ளிப் போட்டு வந்தது.  இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகள் கூட நிறைவேறாமல் மக்கள் அவதியடைந்து வந்தனர். நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்புகளை தொடர்ந்து கடந்த 2019ல் புதிதாக துவக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

பின்னர் மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கு  நடந்தது. இதில், திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கொரோனா பரவல் காரணமாக நடத்த முடியாத சூழல் இருந்தது. தற்போது இத்தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. முதல்கட்டமாக போட்டியிடுபவர்களுக்கான ஒதுக்கீடு பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் பெண்களுக்கு சமமான ஒதுக்கீடு வழங்கி அனைவரின் விழிகளையும் வியப்பால் விரிய வைத்துள்ளது ஆளும் திமுக அரசு.

தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. மொத்தம் 6,36,25,813 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்கள் போட்டியிடுவதற்காக ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கும், மதுரை, திண்டுக்கல், சிவகாசி உள்பட 9 மாநகராட்சிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 138 நகராட்சிகளில் 20 ஆதிதிராவிடர்கள், ஒன்று பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பொதுப்பிரிவுக்கு 58 உட்பட மொத்தம் 69 நகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

490 ஊராட்சிகளில்  2 பழங்குடியினர், 43 ஆதிதிராவிடர், 200 பொது என மொத்தம் 245 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியை பொருத்தவரை ஒரு இடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதில், மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பொதுப்பிரிவுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களிலும் பெண்கள் நிற்கலாம். மொத்தத்தில் உள்ளாட்சிகளில் பெண்களின் ராஜ்ஜியம் கொடி கட்டி பறக்கப் போகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், சாலையோர பாதுகாப்பில் பெண் போலீசாருக்கு விலக்கு உட்பட பல்வேறு சலுகைகளை அறிவிக்கப்பட்டன. ஏற்கனவே, திமுக ஆட்சியில் முதல்வராக கலைஞர் இருந்தபோது, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டத்தை கொண்டு வந்தார். அவரது வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பெண்களுக்கான சம உரிமையை நிலைநாட்டி, உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்கி சமத்துவ காவலராக திகழ்வதாக தமிழக மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்