தாராபுரம் தளவாய்பட்டினத்தில் எருதுவிடும் நிகழ்ச்சிக்கு தடை காளைகளுடன் மக்கள் மறியல்
2022-01-19@ 00:23:40

தாராபுரம்: தாராபுரம் அடுத்த தளவாய்பட்டினத்தில் எருது விடும் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்காததால் ஜல்லிக்கட்டு காளைகளுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தளவாய்பட்டினம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக எருதுவிடும் விளையாட்டு நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நேற்று காலை 500க்கும் மேற்பட்டோர் காளைகளுடன் திரண்டு தாராபுரம்-உடுமலை செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த தாராபுரம் வருவாய்த்துறை கோட்டாட்சியர் குமரேசன், தாசில்தார் சைலஜா, டிஎஸ்பி தன்ராஜ் மற்றும் போலீசார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கும் வரை மறியலை கைவிட மாட்டோம், மாவட்ட கலெக்டர் நேரில் வந்து இதற்கான உத்தரவை எங்களுக்கு வழங்க வேண்டும் என்றனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தற்போது கொரானா தொற்று அதிகரித்து வருவதால் அடுத்த ஆண்டு எருதுவிடும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக தாராபுரம்-உடுமலை சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:
Tarapuram Talawaipattina bullfighting show ban people stir with bulls தாராபுரம் தளவாய்பட்டின எருதுவிடும் நிகழ்ச்சி தடை காளைகளுடன் மக்கள் மறியல்மேலும் செய்திகள்
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கை விலை உயர்வு
கவுண்டமாநதியில் 3ம் கட்ட தூர்வாரும் பணி ஜரூர்
ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மறியல்: போக்குவரத்து பாதிப்பு
வள்ளியூர் அருகே பரபரப்பு: சாலையில் ஊர்ந்து சென்ற 12 அடி நீள மலைப்பாம்பு: வனத்துறையிடம் ஒப்படைப்பு
விளாத்திகுளம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லோடு ஆட்டோ
திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலிகளை கணக்கெடுக்க 300 இடங்களில் கேமரா பொருத்தும் பணி துவங்கியது
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!