வெங்கல் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
2022-01-19@ 00:22:52

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே வெங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை, போலீசார் கைது செய்தனர். பெரியபாளையம் அருகே வெங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது, உத்தரவின்பேரில் வெங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார், வெங்கல் எம்ஜிஆர் நகரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அங்கு நுழைந்து தீவிர சோதனை நடத்தினர். அங்கு, 1.5 கிலோ எடையுள்ள கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டு பிடித்து, பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்பாபு (38), அவரது கூட்டாளி பாகல்மேடு சவுந்தர்ராஜன் (48) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை, திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் போலீசார் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
அரக்கோணம் அருகே சடலமாக மீட்பு காஞ்சிபுரம் தம்பதியை கொன்ற உறவினர் உட்பட 3 பேர் கைது: சூனியம் வைத்ததாக கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது அம்பலம்
கே.வி.குப்பம் அருகே தாய் கண்முன் பயங்கரம் தென்னை மட்டையால் அடித்து கல்லூரி மாணவன் கொலை: உறவினர் கைது; 2 பேருக்கு வலை
பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு மண்டல துணை பிடிஓ அதிரடி பதவியிறக்கம்: தூத்துக்குடி கலெக்டர் நடவடிக்கை
கூரியர் ஊழியரிடம் செல்போன் பறிப்பு: இரண்டு வாலிபர்கள் கைது
பூந்தமல்லி அருகே தலை கைகள் இல்லாமல் எரிக்கப்பட்டவர் ஆட்டோ டிரைவரா? போலீஸ் தீவிர விசாரணை
யார் பெரிய ரவுடி என்ற தகராறில் 3 பேரை கொலை செய்ய தயாராக இருந்த 7 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது: 12 கத்தி, ஆசிட், 5 பைக், கஞ்சா பறிமுதல்
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!