SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாரம்பரியம் காத்த அரசு

2022-01-19@ 00:05:13

தமிழகத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு போட்டிகளை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்துவது வழக்கம். கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் இம்முறை ஜல்லிக்கட்டு நடக்குமா என்ற குழப்பம் கிராம கமிட்டியினர் மற்றும் காளைகள் வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் மத்தியில் எழுந்தது.தமிழ் பாரம்பரியம், பண்பாட்டுக்கு எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் வழங்கி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சில வழிகாட்டுதல்களுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்தது.

இதன்படி, நடப்பாண்டிற்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் கடந்த 13ம் தேதி நடந்தது. தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் 14ம் தேதி அவனியாபுரம், 15ம் தேதி பாலமேடு, 17ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. மேலும், பல இடங்களிலும் நடத்தப்பட்டது. அனைத்துப் போட்டிகளிலும், அரசு வழிகாட்டுதல்களுடன் 150 பார்வையாளர்கள், 300 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட காளைகள் மட்டுமே பங்கேற்றன.கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஜல்லிக்கட்டில், ஆளுங்கட்சியினர் தரப்பு காளைகளே அதிகம் விடப்பட்டன. முறையாக பதிவு செய்தவர்களின் காளைகள் அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. மேலும், வீரர்கள் பங்கேற்பு, பரிசு வழங்குவதில் முறைகேடு உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. ஆனால், இம்முறை அந்தக்குறைகள் எழாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. முன்பதிவு செய்து, பரிசோதிக்கப்பட்ட காளைகளே வரிசை முறையில் அனுமதிக்கப்பட்டன. தடுப்பூசி 2 தவணை போட்ட வீரர்கள் மட்டுமே போட்டியின்போது களமிறங்கினர். கண்டுகளிக்கவும் அனுமதிக்கப்பட்டனர்.

எந்தவித அசம்பாவிதமோ, ஏற்பாடுகளில் குறைபாடுகளோயின்றி அமைச்சர்கள், அதிகாரிகள் மிகச்சிறந்த முறையில் ஜல்லிக்கட்டை நடத்தி முடித்துள்ளனர். வரலாற்றிலேயே முதல்முறையாக அலங்காநல்லூரில் அதிகபட்சமாக 1,020 காளைகள் களமிறக்கப்பட்டன. இதற்காகவே, முன்னதாக துவங்கப்பட்டு சுமார் 10.30 மணிநேரம் போட்டி நடத்தப்பட்டது. இதன்மூலம் முன்பதிவு காளைகள் அனைத்தும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. ஒவ்வொரு காளைக்கும் தங்கக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டன. இதனால்  காளை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிக காளைகளை அடக்கிய வீரர்களுக்கு கார்கள், டூவீலர்கள் உள்பட விலை உயர்ந்த பரிசுகள் வழங்கப்பட்டன. உணவு, குடிநீர், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட எந்த குறைபாடுகளும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.கொரோனா பெருந்தொற்று காலத்திலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை சிறந்த முறையில் நடத்திக் காட்டி, பாரம்பரியத்தை கட்டி காத்து திமுக அரசு சாதித்துள்ளதாக,  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், தென்மாவட்ட பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

  • nepallumbii

    நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

  • ooty-rose-exhi-14

    50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

  • odisha_park

    இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்