காவடி தூக்கி, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு: வாசலில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம்
2022-01-19@ 00:05:11

சென்னை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருத்தணி, கந்தகோட்டம், வடபழனி முருகன் கோயில் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கோயில் வாசலில் நின்று அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிலர் காவடி தூக்கியும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் நேற்று விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. குறிப்பாக, சென்னையில் வடபழனி முருகன் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில், பாரிமுனை கந்தகோட்டம் முத்துகுமாரசுவாமி கோயில், திருப்போரூர் முருகன் கோயில், வல்லக்கோட்டை முருகன் கோயில், சிறுவாபுரி முருகன் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை கோயில்களுக்கு பக்தர்கள் ெசல்ல தடை விதிக்கப்பட்டது. தைப்பூசம் என்பதால் நேற்று முருகன் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்த அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கோயில்களின் வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்கு வெளியே தேங்காய் உடைத்தும், கற்பூரம் மற்றும் தீபம் ஏற்றியும் முருகப்பெருமானை வழிபட்டனர். இந்நிலையில், கோயில்களுக்கு வர தடை விதிக்கப்பட்டிருந்தாலும் நுழைவாயிலில் நின்று பக்தர்கள் சிலர் பால்குடம், காவடி, அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தைப் பூச தெப்ப திருவிழா நேற்று முன்தினம் முதல் இன்று வரை 3 நாட்கள் நடக்கிறது. 3வது நாளான இன்று 9 சுற்றுகளும் தெப்பம் வலம் வர உள்ளார். இந்த தெப்பத்திருவிழா http://www.youtube.com/c/MYLAPOREKAPALEESWARAR TEMPLE என்ற யூடியூப் சேனல் மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதனை பக்தர்கள் கண்டுகளித்தனர்.
மேலும் செய்திகள்
திருவொற்றியூர், மணலியில் ஆதரவற்றோர் விடுதியில் மேயர் பிரியா திடீர் ஆய்வு
அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றில் 69 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாடுவோம்: சென்னை கலெக்டர் வேண்டுகோள்
ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
போதை என்பது தனிமனித பிரச்சனை அல்ல; சமூக பிரச்சனை: முதலமைச்சர் ஸ்டாலின்
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!