வண்டலூர் உயிரியல் பூங்காவில் பரபரப்பு: சிங்கத்தை தொடர்ந்து பெண் சிறுத்தை உயிரிழப்பு
2022-01-18@ 16:34:32

கூடுவாஞ்சேரி: சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட அரியவகை விலங்குகளும், பறவைகளும் ஏராளமாக உள்ளன. இந்நிலையில், கடந்த 15ம் தேதி ரேஞ்சர்கள் உட்பட 315 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒரு ரேஞ்சர் உட்பட 76 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாட்டு பொங்கல் தினமான கடந்த 17ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படும் என பூங்கா நிர்வாகம் அதிரடியாக அறிவித்தது.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி விஷ்ணு என்ற 5 வயது ஆண் சிங்கம் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. பூங்கா மருத்துவமனையில் சிங்கத்தை பிரேத பரிசோதனை செய்தபோது உணவு குழாய் வெடித்து இறந்ததாக கூறினர். மேலும் சிங்கத்தின் மாதிரி கால்நடை பல்கலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் கொரோனா தொற்றால் சிங்கம் இறந்ததா? அல்லது உணவு குழாய் வெடித்து இறந்ததா? என தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பூங்காவில் உள்ள ஜெயா என்ற 18 வயது பெண் சிறுத்தை இன்று காலை உயிரிழந்தது. இதன் உடல் பூங்கா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை வந்த பிறகுதான் சிறுத்தை கொரோனா தொற்றால் இறந்ததா? அல்லது வேறு காரணமா? என தெரியவரும். இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பூங்காவில் அடுத்தடுத்து சிங்கம், சிறுத்தை இறந்த சம்பவம் வண்டலூர் பூங்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ விபத்து: கண் எரிச்சல், சுவாசக்கோளாறால் மக்கள் அவதி
சாலை தடுப்பில் பைக் மோதி மகன் பலி; தந்தை படுகாயம்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு
குழாய் மாற்றியமைக்கும் பணி காரணமாக கொடுங்கையூரில் 23ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வாரியம் அறிவிப்பு
இருசக்கர வாகனங்களில் இனிமேல் பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்
தமிழகத்தில் கள்ளச்சாராயம் போலி மதுவை ஒழிக்க நடவடிக்கை: எடப்பாடி கோரிக்கை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்