பொன்னை அருகே அதிசயம் பழமை வாய்ந்த கோயிலில் கண் திறந்த விநாயகர்
2022-01-18@ 15:57:43

* பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு
பொன்னை : பொன்னை அருகே பழமை வாய்ந்த பொன்னன் கணபதி கோயில் விநாயகர் கண்விழித்து பார்ப்பதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். காட்பாடி தாலுகா பொன்னை பகுதியில் உள்ள பெருமாள் கோயில் தெருவில் சுமார் 800 வருடங்கள் பழமையான பொன்னன் கணபதி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் சென்று வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் அப்பகுதி சிறுவர்கள், விநாயகரை வழிபட சென்றனர். அப்போது, விநாயகர் கண் திறந்து விழித்து இருப்பத்தை பார்த்த அவர்கள், அதிர்ச்சியுடன் வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதி பெரியவர்கள் சென்று விநாயகர் சிலையை பார்த்தனர். அப்போது விநாயகர் கண் திறந்தபடி விழித்து பார்த்ததை கண்ட பெரியவர்கள் வியப்படைந்தனர்.
உடனடியாக வருவாய் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் உடனடியாக கோயில் கதவுகளை அடைத்து அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்களை கலைந்து போக செய்தனர்.
இச்சம்பவம் இப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால், பொன்னை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொன்னன் கணபதி கோயிலுக்கு திரண்டு வந்து விநாயகர் கண் விழிப்பதை ஆச்சரியத்துடன் கண்டு வழிபட்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இதுகுறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்
25 மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்
ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு பகுதி கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
லாரி மோதி அடையாளம் தெரியாத நபர் பலி
ஊராட்சி அலுவலகத்தில் புகுந்த மண்ணுளி பாம்பு: பத்திரமாக மீட்பு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!