தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா
2022-01-18@ 15:40:45

பல்லாவரம்: தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் நடந்த தெப்பத்திருவிழாவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் காட்சியளித்தார். சென்னை மாங்காடு பகுதியில் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தை முன்னிட்டு 3 நாட்கள் கோயிலில் தெப்பத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் ஆரவாரமின்றி அமைதியாக நேற்று மாலை 6 மணிக்கு 3 நாள் தெப்பத்திருவிழா தொடங்கியது. இன்றும், நாளையும் நடக்கிறது. இதற்காக, கோயில் வளாகத்தில் அமைந்துள்ள திருக்குளம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவிழாவில் கலந்துகொள்ள கோயில் அலுவலர்கள், முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கூட்டமின்றி தெப்பத்திருவிழா அமைதியாக நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாங்காடு கோயில் நிர்வாகம் சார்பில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் லட்சுமணன் மற்றும் கோயில் பரம்பரை தர்மகர்த்தா மணலி டாக்டர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
வரி குறைப்பு போதாது!: ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து மே 25 முதல் ஒரு வாரம் போராட்டம்..கம்யூ., விசிக கூட்டாக அறிவிப்பு..!!
ஒரகடம் அருகே ரூ.155 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை: ஒன்றிய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் ஆய்வு 300 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
செம்பரம்பாக்கம் ஏரி புனரமைப்பு பணிகள் நாட்டில் உள்ள இதர நகரங்களுக்கு முன்மாதிரியாக அமையும்: ஒன்றிய அமைச்சர் புபேந்தர் யாதவ் பேச்சு
சென்னை பிரபல மாலில் நடந்த மது விருந்தில் அதிர்ச்சி சம்பவம் அதிக போதையில் மயங்கி விழுந்து பலியான ஐ.டி. ஊழியர்: போதைப்பொருள் குறித்து போலீஸ் விசாரணை
மதுரவாயல் முதல் துறைமுகம் வரை ஈரடுக்கு பறக்கும் சாலை 110 பழைய தூண்களை பயன்படுத்த முடிவு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்