ராஜஸ்தானில் டிராக் சைக்கிள் போட்டி புதியம்புத்தூர் மாணவி முதலிடம் : ஆசிய போட்டிக்கு தகுதி
2022-01-18@ 15:25:03

ஓட்டப்பிடாரம் : ராஜஸ்தானில் நடந்த இந்திய டிராக் சைக்கிள் போட்டியில் புதியம்புத்தூர் பள்ளி மாணவி முதலிடம் பிடித்தார். இதன்மூலம் ஆசிய தடகள போட்டிக்கு தகுதி பெற்றார்.ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமண் கிராமத்தை சேர்ந்தவர் சேசையா மகள் ஸ்ரீமதி. இவர், ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். மதி டிராக் சைக்கிள் போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டி
களில் முதலிடம் பிடித்துள்ளார். சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக கனிமொழி எம்பியின் உதவியை நாடினார். உடனடியாக கனிமொழி எம்பியும் ரூ.5.50 லட்சத்தில் சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். இதையடுத்து கடந்தாண்டு டிச.24ம் தேதி ராஜஸ்தானில் நடைபெற்ற இந்திய அளவிலான டிராக் சைக்கிள் போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ மதி, குழு பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், தனித்திறன் பிரிவில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளி பதக்கமும் வென்றார்.
இதன் மூலம் ஸ்ரீமதி ஆசிய தடகளப் போட்டிக்கு தகுதி பெற்று புதுடெல்லியில் உள்ள சாய் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். தேசிய போட்டியில் பதக்கம் வென்றுள்ள ஸ்ரீமதியை கிராம மக்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
கல்லூரிகளில் வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்கு: டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
பஞ்சு, நூல் விலை சீராகும் வரை 400 நூற்பாலைகளில் உற்பத்தி நிறுத்தம்: தினமும் ரூ. 500 கோடி இழப்பு
ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை
6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து சிறப்பு திட்டம் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊட்டியில் தொடங்கி வைத்தார்
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலின் தெப்பத் திருவிழா கமலாலய குளத்தில் தொடங்கியது
காட்டுயானை மின்சாரம் தாக்கி பலி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்