3 நாள் தடைக்கு பின்னர் குற்றாலம், அகத்தியர் அருவிகளில் குளிக்க அனுமதி
2022-01-18@ 15:22:44

தென்காசி : குற்றாலம் அருவிகளில் 3 நாள் தடைக்கு பிறகு நேற்று சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பண்டிகை காலத்தை முன்னிட்டு தொற்று பரவலை தடுக்கும் விதமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 14ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த மூன்று தினங்களாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில் நேற்று முதல் தடை விலக்கப்பட்டு காலை 6 மணி முதல் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி தரிசனம் நிறைவு பெற்றதாலும் அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுவதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை சுமாராகவே காணப்பட்டது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் சுமாராகவும் பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது.
ஐந்தருவியில் 4 பிரிவுகளில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. பழைய குற்றால அருவியில் சுமாராக தண்ணீர் விழுகிறது. புலி அருவியில் தண்ணீர் வரத்து அடியோடு நின்று விட்டது. நேற்று மதியம் வரை லேசான வெயிலும் மதியத்திற்குப்பிறகு சற்று இதமான சூழலும் காணப்பட்டது.
விகேபுரம்: ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் பாபநாசம் அகத்தியர் அருவியிலும் கடந்த 14ம் தேதி முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 3 நாட்கள் தடை உத்தரவுக்கு பின்னர் நேற்று சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அதே நேரத்தில் பாபநாசம் கோயில் மற்றும் காரையாறு சொரிமுத்தைய்யானர் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து சிறப்பு திட்டம் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊட்டியில் தொடங்கி வைத்தார்
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலின் தெப்பத் திருவிழா கமலாலய குளத்தில் தொடங்கியது
காட்டுயானை மின்சாரம் தாக்கி பலி
அகத்தியர் தீவு அருகே 220 கிலோ ஹெராயின் பறிமுதல்: தமிழகம், கேரளாவை சேர்ந்த 20 பேர் கைது
கண்ணமங்கலம் அருகே சிங்கிரி கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை
மேட்டுப்பாளையம்- ஊட்டிக்கு சிறப்பு ரயில் சேவை: இன்று துவங்கியது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்