கணவரை பிரிகிறார் நடிகர் சிரஞ்சீவி மகள்?
2022-01-18@ 15:10:36

ஐதராபாத்: நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, தனது கணவரும் நடிகருமான கல்யாணை விவாகரத்து செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா, சிரிஷ் பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்தார். கணவர் சித்ரவதை செய்வதாக புகார் கூறிய நிலையில் கடந்த 2011ம் ஆண்டு அவரை ஸ்ரீஜா பிரிந்தார். இதையடுத்து நடிகர் கல்யாண் தேவ் என்பவரை 2016ல் அவர் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கல்யாண் தேவ்க்கும் ஸ்ரீஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தனது பெயருடன் இருந்த கல்யாண் என்கிற பெயரை ஸ்ரீஜா நீக்கிவிட்டு, தனது தந்தையின் குடும்ப பெயரான கொனிடேலா என்பதை சேர்த்துள்ளார். இதனால் தம்பதி பிரிவது உறுதியாகியுள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. சமீபத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை நடிகை சமந்தா விவாகரத்து செய்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிவதாக அறிவித்தார். இந்நிலையில் சிரஞ்சீவியின் மகளும் கணவரை பிரிவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பாஜகவை சேர்ந்த நடிகையான ஹேமமாலினி கன்னம் போல் இருக்கு சாலை : சட்டீஸ்கர் காங். அமைச்சர் பேச்சால் சலசலப்பு
டி. ஆர். டி. ஓ. அமைப்பின் ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்: இ-ஸ்கூட்டர்களில் பேட்டரி வடிவமைப்பில் குறைபாடு அம்பலம்
டெல்லியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை: விமானசேவை பாதிப்பால் மக்கள் அவதி
குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு நடக்காது... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி!!
இந்தியாவில் ஒரே நாளில் 2,022 பேருக்கு கொரோனா.. 46 பேர் உயிரிழப்பு.. 2,099 பேர் குணமடைந்தனர்!!
பேட்டரி வடிவமைப்பு குறைபாடும், சரிவர பரிசோதிக்கப்படாததுமே இ - ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்க காரணம் : டி.ஆர்.டி.ஓ ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்