கடந்த 2021ம் ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையை 18,639 பேர் பயன்படுத்தி உள்ளனர்
2022-01-18@ 14:51:23

பெரம்பலூர் : கடந்த 2021ம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் 18,639 பேர் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி பயனடைந்துள்ளனர். இது குறித்து 108 ஆம்புலன்ஸ் சேவையின் மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 14 செயல்பட்டு வருகிறது. அவசர அழைப்பு பெறப்பட்டு 8 முதல் 13 நிமிடங்களில் நகர் புறம் மற்றும் கிராம புறங்களில் சேவை அளிக்கும் வகையில் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 2021ம்ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 18,639 பேர் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.
108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துவதில் 2020ம் ஆண்டை காட்டிலும் 2021ம் ஆண்டு 23 சதவீதம் பேர் அதிகரித்துள்ளனர். இதில் 4,195 பேர் கருவுற்ற தாய்மார்கள் ஆகும். 2,755 பேர் சாலை விபத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவவலி ஏற்பட்டு 10 குழந்தைகள் ஆம்புலன்சிலேயே பிறந்துள்ளன.
கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளின் போது 1,072 பேர் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர். மேலும் எதிர்பாராமல் விஷம் குடித்தவர்கள் 958 பேர், வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 1,393 பேர், விலங்குகளால் தாக்கப்பட்டவர்கள் 343 பேர், மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் 1,074 பேர், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்கள் 909 பேர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 311 பேர், தற்கொலைக்கு முயன்றவர்கள் 173 பேர், இதர சம்பவங்களில் சிக்கியவர்கள் 4,692 பேர் என மொத்தம் 18,639 பேர் பயனடைந்துள்ளனர்.
இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வெண்டிலட்டர் இசிஜி மானிட்டர் போன்ற அதிநவீன கருவிகள் கொண்ட ஆம்புலென்ஸ் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இங்குபேட்டர் மற்றும் வெண்டிலட்டர் வசதியுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சராசரியாக மாதம் தோறும் 45க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
நடைபாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு: அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
சங்கரா பல்கலையில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா
தமிழக முதல்வர், மனைவி உருவத்தில் பட்டுசேலை: நெசவாளர் தம்பதி சாதனை
ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
தமிழக மக்களுக்காக ஒரு நாளைக்கு 24 மணிநேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 20 மணிநேரம் உழைக்கிறார்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
அதிமுக ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!