நீராதாரங்களை அசுத்தப்படுத்தும் நபர்கள் சுற்றுசூழல் பாதிக்கும் அபாயம் நீடிப்பு
2022-01-18@ 14:28:11

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணை பகுதிகளுக்கு செல்லும் நபர்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை நீர் நிலைகளில் வீசி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி சுற்றுசூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் உள்ளன. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள சுற்றுலாத்தலங்களை பார்வையிடுவது மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களையும் பார்வையிட ஆர்வம் காட்டுகின்றனர்.
நீலகிரி சுற்றுலாத்தலங்கள் நிறைந்த மாவட்டம் மட்டுமின்றி அதிக வனப்பகுதிகள் உள்ள மாவட்டமாகவும் விளங்கி வருகிறது. மேலும் நீர்மின் உற்பத்திக்காக பல்வேறு அணைகளும் உள்ளன. மின்வாரிய அணைகள், அடர்ந்த காப்பு காடுகளுக்குள் செல்ல யாரையும் அனுமதிப்பதில்லை. ஊட்டி தவிர்த்து புற நகர் பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் நபர்கள் அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் மின்வாரிய அணை பகுதிகளில் அத்துமீறி நுழைகின்றனர்.
குறிப்பாக எமரால்டு, அவலாஞ்சி அணை பகுதிகளில் அத்துமீறி நுழைகின்றனர். மேலும் அணையில் இறங்கி விளையாடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். வனப்பகுதி மற்றும் மின்வாரிய அணைப்பகுதிக்குள் நுழையும் நபர்கள் அங்கு உணவு மற்றும் மது போன்றவற்றை அருந்தி விட்டு மீதமான உணவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், காலி மது பாட்டில்களை வீசி விடுகின்றனர். இதுமட்டுமின்றி அணைக்குள் வாகனங்களை இயக்கி வாகனங்களை கழுவுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சிலர் காப்பு காடுகளுக்குள் ஆபத்தை உணராமல் அத்துமீறி நுழைகின்றனர். இதனால் அவர்களை யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் தாக்க கூடிய அபாயமும் நீடிக்கிறது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் வனப்பரப்பு அதிகமாக உள்ளது. இதே போல் மின் உற்பத்தி செய்வதற்கு நீரை தேக்கி வைக்கும் அணைகள், நீர் தேக்கங்களும் உள்ளன. குறிப்பாக நீர் தேக்கம், அணைகள் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக விளங்கி வருகிறது. இப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் நபர்கள் பிளாஸ்டிக் குப்பைகளை வீசுகின்றனர். இதனால் சுற்றுசூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே இதனை கண்காணிக்க வேண்டும், என்றனர்.
மேலும் செய்திகள்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2.28 அடியாக அதிகரிப்பு: ஒரு வாரத்தில் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு
கோவையில் பொருநை அகழாய்வு கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கயிறு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்... கோவையில் கயிறு வணிக மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் பகுதியில் விபத்து ஏற்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் அலுவலகங்களில் போலீசார் சோதனை
ஈரோடு அருகே மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான திருவிழா: இஸ்லாமியருக்கு சிலை வைத்து வழிபடும் இந்துக்கள்
காவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுத்த எடப்பாடி பழனிசாமி
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!