முழு ஊரடங்கில் விதி மீறியோர் மீது... 5,688 வழக்குகள் ; ரூ.11,44,200 அபராதம் வசூலிப்பு
2022-01-18@ 12:05:59

சென்னை : தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு 06.01.2022 முதல் 31.01.2022 வரை வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரையில் இரவு நேர முழு ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமையன்று முழு நேர ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு சட்டம் & ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 10,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று (17.01.2022) இரவு 10.00 மணி முதல் இன்று (18.01.2022) காலை 05.00 மணி வரை இரவு நேர ஊரடங்கில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் தலைமையில், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில், சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படை காவல் ஆளிநர்கள் கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, இரவு நேர ஊரடங்கில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் மீறியது தொடர்பாக 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய 175 இருசக்கர வாகனங்கள், 09 ஆட்டோக்கள் மற்றும் 01 இலகுரக வாகனம் என மொத்தம் 185 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், நேற்று (17.01.2022) கொரோனா தடுப்பின் முக்கிய வழிகாட்டுதல் நெறிமுறையான முகக்கவசம் அணியாதது தொடர்பாக 5,666 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.11,33,200/- அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.11,000/- அபராதமும் வசூலிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில், மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆகவே, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு சமயத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கும்படி சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது
மேலும் செய்திகள்
வரி குறைப்பு போதாது!: ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து மே 25 முதல் ஒரு வாரம் போராட்டம்..கம்யூ., விசிக கூட்டாக அறிவிப்பு..!!
ஒரகடம் அருகே ரூ.155 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை: ஒன்றிய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் ஆய்வு 300 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
செம்பரம்பாக்கம் ஏரி புனரமைப்பு பணிகள் நாட்டில் உள்ள இதர நகரங்களுக்கு முன்மாதிரியாக அமையும்: ஒன்றிய அமைச்சர் புபேந்தர் யாதவ் பேச்சு
சென்னை பிரபல மாலில் நடந்த மது விருந்தில் அதிர்ச்சி சம்பவம் அதிக போதையில் மயங்கி விழுந்து பலியான ஐ.டி. ஊழியர்: போதைப்பொருள் குறித்து போலீஸ் விசாரணை
மதுரவாயல் முதல் துறைமுகம் வரை ஈரடுக்கு பறக்கும் சாலை 110 பழைய தூண்களை பயன்படுத்த முடிவு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்